தேனி மாநகராட்சி அறிவிப்பு வெளியாகாதது ஏன் | Dinamalar

தமிழ்நாடு

தேனி மாநகராட்சி அறிவிப்பு வெளியாகாதது ஏன்

Added : ஆக 26, 2021
Share
தேனி : பூகோள ரீதியாக முறையான எல்லை வரையறை செய்யாததால் சட்டசபையில் தேனி மாநகராட்சி ஆகும் அறிவிப்பு வெளிவராமல் போனது.தமிழகத்தில் ஏற்கனவே 15 மாநகராட்சிகள் உள்ளன. நேற்று முன்தினம் நடந்த சட்டசபை மானிய கூட்டத்தில் , தாம்பரம், காஞ்சிபுரம், கரூர், கடலுார், கும்பகோணம், சிவகாசி நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி அறிவித்தனர்.இக்கூட்டத்திற்கு முன்பே தேனி- பெரியகுளம்

தேனி : பூகோள ரீதியாக முறையான எல்லை வரையறை செய்யாததால் சட்டசபையில் தேனி மாநகராட்சி ஆகும் அறிவிப்பு வெளிவராமல் போனது.

தமிழகத்தில் ஏற்கனவே 15 மாநகராட்சிகள் உள்ளன. நேற்று முன்தினம் நடந்த சட்டசபை மானிய கூட்டத்தில் , தாம்பரம், காஞ்சிபுரம், கரூர், கடலுார், கும்பகோணம், சிவகாசி நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி அறிவித்தனர்.இக்கூட்டத்திற்கு முன்பே தேனி- பெரியகுளம் நகராட்சிகளை இணைத்து தேனி மாநகராட்சி அறிவிப்பு வெளியாகும் என்ற பேச்சு இருந்தது. இதற்கான கோப்புகள் தயார் செய்து நகராட்சி அலுவலர்கள் அரசுக்கு சமர்ப்பித்தனர்.

ஆனால் இறுதியில் தேனி நகராட்சி மாநகராட்சியாகும் அறிவிப்பு வெளியாக வில்லை.என்ன காரணம்இது பற்றி விசாரிக்கையில், தேனி, பெரியகுளம் நகராட்சிக்கு இடையே 14 கி.மீ. இடைவெளி உள்ளது. இதனை ஒருங்கிணைத்து மாநகராட்சி என்றால் நிர்வாக சிரமம் ஏற்படும். ஆனால் பூகோள ரீதியாக தேனிக்கு மிக அருகில் உள்ள பழனிசெட்டிபட்டி, பூதிப்பூரம், வீரபாண்டி பேரூராட்சிகள், குன்னுார், அம்மச்சியாபுரம், அரண்மைனைப்புதுார், அரசு மருத்துவகல்லுாரி உள்ள க.விலக்கு வரை எல்லை வரையறை செய்து அரசுக்கு ஆவணங்கள் அனுப்பி இருந்தால் தேனி மாநகராட்சி தரம் உயர்வு ஆகி இருக்கும்.

சென்னையில் இருந்தே தேனி, பெரியகுளம் இணைத்து மாநகராட்சி திட்டம் வடிவமைப்பு செய்ததால் அரசு அதனை நிறுத்தி வைத்தது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X