தமிழ்நாடு

மேகமலையில் குவியும் பயணிகள்; கட்டுப்படுத்த திணறும் வனத்துறை

Added : ஆக 26, 2021
Share
Advertisement
சின்னமனுார் : மேகமலை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை வார விடுமுறை நாட்களில் மிகவும் அதிகமாக உள்ளது. கட்டுப்படுத்த வனத்துறையினர் திணறி வருகின்றனர்.மேகமலையில் ஹைவேவிஸ், மணலாறு, அப்பர் மணலாறு, வெண்ணியாறு, மகாராஜாமெட்டு, இரவங்கலாறு போன்ற மலைப்பகுதிகள் உள்ளன. முழுக்க முழுக்க தேயிலை தோட்டங்கள், அதன்பின் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. வெள்ளிமலைப்பகுதியில் சிறுத்தை,

சின்னமனுார் : மேகமலை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை வார விடுமுறை நாட்களில் மிகவும் அதிகமாக உள்ளது. கட்டுப்படுத்த வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

மேகமலையில் ஹைவேவிஸ், மணலாறு, அப்பர் மணலாறு, வெண்ணியாறு, மகாராஜாமெட்டு, இரவங்கலாறு போன்ற மலைப்பகுதிகள் உள்ளன. முழுக்க முழுக்க தேயிலை தோட்டங்கள், அதன்பின் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. வெள்ளிமலைப்பகுதியில் சிறுத்தை, புலிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. சமீபத்தில் மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேகமலை ைஹவேவிஸ் பகுதிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலத்தினரும் வாகனங்களில் வருகின்றனர்.சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. மணலாறு அணை தண்ணீர் அருகில் அமர்ந்து சாப்பிடுவது, செல்பி எடுப்பது என ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்களை கட்டுப்படுத்த திணறும் வனத்துறையினர் போலீசார் உதவியை எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X