சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டாளர்கள் புகார்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
சென்னை-வீட்டு வசதி வாரிய திட்டத்தில், மனை வாங்கியவர்கள், முறையாக தவணை செலுத்தினாலும், அபராத வட்டி விதிக்கப்படுவதாக புகார் எழுந்து உள்ளது.திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை அடுத்த, கீழ்முதலம்பேடு பகுதியில், வாரியம் சார்பில், மனைகள் ஒதுக்கப்பட்டன.இத்திட்ட ஒதுக்கீட்டாளர்கள் கூறியதாவது:கீழ்முதலம்பேடு திட்டத்தில், மனை வாங்கியதன் அடிப்படையில் அதற்கான தவணையை மாதம்

சென்னை-வீட்டு வசதி வாரிய திட்டத்தில், மனை வாங்கியவர்கள், முறையாக தவணை செலுத்தினாலும், அபராத வட்டி விதிக்கப்படுவதாக புகார் எழுந்து உள்ளது.திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை அடுத்த, கீழ்முதலம்பேடு பகுதியில், வாரியம் சார்பில், மனைகள் ஒதுக்கப்பட்டன.இத்திட்ட ஒதுக்கீட்டாளர்கள் கூறியதாவது:கீழ்முதலம்பேடு திட்டத்தில், மனை வாங்கியதன் அடிப்படையில் அதற்கான தவணையை மாதம் தோறும், 10ம் தேதிக்குள் செலுத்தி வருகிறோம். இத்தொகையை முறையாக கணக்கில் சேர்க்காமல் அதிகாரிகள் தாமதம் செய்கின்றனர்.இவர்கள் செய்த தாமதத்தை மறைத்து, ஒதுக்கீட்டாளர்கள் தாமதமாக தவணை செலுத்தியதாக கூறுகின்றனர். இதன் அடிப்படையில், ஒரு ஒதுக்கீட்டாளருக்கு, 4,000 ரூபாய் வீதம் அபராத வட்டி வசூலிக்கப்படுகிறது.தவணை வசூல் குளறுபடியால், ஒதுக்கீட்டாளர்கள் பாதிக்கப்படுவது ஏன், வாரிய உயரதிகாரிகள் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இப்புகார் தொடர்பான விசாரணையை வீட்டு வசதி வாரிய உயரதிகாரிகள் துவக்கி உள்ளதாக தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X