சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கர்ப்பிணி தீக்குளிக்க முயற்சி

Added : ஆக 26, 2021
Share
Advertisement
தேனி : கணவருடன் சேர்த்து வைக்க கோரி ஏழு மாத கர்ப்பிணி முருகேஸ்வரி 25, தேனி கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து காப்பாற்றினர்.மேலக்கூடலுார் கருணாநிதி காலனியை சேர்ந்தவர் முருகேஸ்வரி. இவர் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து நுழைவு வாயில் அருகே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் இவரை தடுத்து தண்ணீர் ஊற்றி

தேனி : கணவருடன் சேர்த்து வைக்க கோரி ஏழு மாத கர்ப்பிணி முருகேஸ்வரி 25, தேனி கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து காப்பாற்றினர்.

மேலக்கூடலுார் கருணாநிதி காலனியை சேர்ந்தவர் முருகேஸ்வரி. இவர் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து நுழைவு வாயில் அருகே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் இவரை தடுத்து தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர்.முருகேஸ்வரி கூறுகை யில், 'நானும் கோகிலாபுரம் சுதாகரும் 28, காதலித்தோம். நான் கர்ப்பிணியானேன். ஜூலையில் திருமணம் செய்து கொண்டோம்.

கணவரின் வீட்டிற்கு அழைத்து சென்ற போது அவரின் பெற்றோர், உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து தாக்கி மிரட்டினர். உத்தமபாளையம் மகளிர் போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. 7 மாத கர்ப்பிணியான நிலையில் கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும்,'' என்றார். தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X