சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரே பெயரில் இரு நிலங்கள்; வருவாய்துறை கண்டித்து தம்பதியர் தர்ணா

Added : ஆக 26, 2021
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகரில் ஒரே பெயரில் உள்ள இருவேறு நிலங்களால் பட்டா மாறுதலுக்கு அலைகழிக்கப்படுவதாக வருவாய் நிர்வாகத்தை கண்டித்து கணவன், மனைவி தர்ணா செய்தனர்.விருதுநகர் அருகே மெட்டுக்குண்டுவை சேர்ந்த விவசாயி அரவிந்த போஸ். இவரது மனைவி காளீஸ்வரிக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலம் தந்தை வழி தாத்தா குருசாமி பெயரில் இருந்தது. வம்சாவழியாக அனுபவித்து வந்ததால் தற்போது

விருதுநகர் : விருதுநகரில் ஒரே பெயரில் உள்ள இருவேறு நிலங்களால் பட்டா மாறுதலுக்கு அலைகழிக்கப்படுவதாக வருவாய் நிர்வாகத்தை கண்டித்து கணவன், மனைவி தர்ணா செய்தனர்.

விருதுநகர் அருகே மெட்டுக்குண்டுவை சேர்ந்த விவசாயி அரவிந்த போஸ். இவரது மனைவி காளீஸ்வரிக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலம் தந்தை வழி தாத்தா குருசாமி பெயரில் இருந்தது. வம்சாவழியாக அனுபவித்து வந்ததால் தற்போது காளீஸ்வரி, உறவினர் ஒருவர் நிலத்தை பாதியாக பகிர்ந்து பயன்படுத்தி வருகிறார்.இதே மெட்டுக்குண்டில் ரைஸ்மில் நடத்தி வரும் குருசாமி என்பவருக்கும் இதே ஊரின் வேறு பகுதியில் ஒரு ஏக்கர் தரிசு நிலம் உள்ளது.

இரு நிலங்களும் குருசாமி பெயரில் இருந்த நிலையில், 2014ல் வறட்சி நிவாரண தொகை காளீஸ்வரி தாத்தா குருசாமிக்கு பதிலாக ரைஸ்மில் குருசாமி நிலத்தில் ஆவணமானது. உடனே காளீஸ்வரி, நிவாரண தொகை ஆவணமான சர்வே எண் 247க்கான குருசாமி இல்லை. எனது சர்வே எண் 222' என கூறினார். இதை வி.ஏ.ஓ.,விடம் எழுதியும் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் காளீஸ்வரி தனது கணவரான அரவிந்த போஸ் பெயருக்கு நிலத்தை பத்திரம் செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தார். அப்போது அது எங்கள் நிலம் என ரைஸ்மில் குருசாமி மகன் சண்முக பெருமாள் வருவாய் கோட்டாட்சியருக்கு மனு அளித்துள்ளார். விசாரணைக்கு அழைக்கும் போது வராமல் இழுத்தடித்துள்ளார். வருவாய் அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. ஆத்திரமடைந்த காளீஸ்வரி ,கணவன் அரவிந்த போஸ் உடன் விருதுநகர் தாலுகா அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X