தமிழ்நாடு

100 சதுர கி.மீட்டர்! காஞ்சியை மாநகராட்சியாக்க அறிவிப்பு

Added : ஆக 26, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் பெருநகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என, தமிழக அரசு சட்டசபையில் தெரிவித்துள்ளது. நகராட்சியை சுற்றியுள்ள பகுதிகளை இணைத்து 100 சதுர கி.மீட்டர் பரப்பளவில் மாநகராட்சி அமையும் என, நகராட்சி நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.காஞ்சிபுரம் பெருநகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என, தமிழக அரசு சட்டசபையில் அறிவித்துள்ளது.
 100 சதுர கி.மீட்டர்! காஞ்சியை மாநகராட்சியாக்க அறிவிப்பு

காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் பெருநகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என, தமிழக அரசு சட்டசபையில் தெரிவித்துள்ளது.

நகராட்சியை சுற்றியுள்ள பகுதிகளை இணைத்து 100 சதுர கி.மீட்டர் பரப்பளவில் மாநகராட்சி அமையும் என, நகராட்சி நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.காஞ்சிபுரம் பெருநகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என, தமிழக அரசு சட்டசபையில் அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதன் முறையாக மாநகராட்சி என்ற உள்ளாட்சி அமைப்பு அமைய உள்ளது. கோவிலுக்கும், பட்டு நெசவுக்கும் பெயர் பெற்ற காஞ்சிபுரம் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்த, பல ஆண்டுகளுக்கு முன்பாகவே, நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மகிழ்ச்சி

இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து, மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.காஞ்சிபுரம் நகராட்சி நிர்வாகம், ஆங்கிலேயே ஆட்சி காலத்திலேயே, 1866ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பாகவே, பாதாள சாக்கடை திட்டம், காஞ்சிபுரத்தில் செயல்பட்டதாக கூறப்படுகிறது.கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2.34 லட்சம் பேர் காஞ்சிபுரம் நகராட்சியில் வசிக்கின்றனர்.இன்றைக்கு 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை காஞ்சிபுரத்தில் இருக்கும். 2013ம் ஆண்டு, காஞ்சிபுரம் நகராட்சியோடு, ஓரிக்கை, நத்தப்பேட்டை, தேனம்பாக்கம் ஆகிய மூன்று ஊராட்சிகளும், செவிலிமேடு ஆகிய பேரூராட்சியும் இணைக்கப்பட்டன.கல்வித் துறைஇதனால், 36.14 சதுர கி.மீட்டர் சுற்றளவு கொண்டுள்ளது. இதன் காரணமாகவே, பெருநகராட்சியாக காஞ்சிபுரம் செயல்பட்டது.மாநகராட்சியாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதால், சுற்றியுள்ள வையாவூர், அய்யங்கார்குளம், கோனேரிக்குப்பம், சிறுகாவேரிப்பாக்கம் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்பட்டு 100 சதுர கி.மீட்டர் கொண்ட மாநகராட்சியாக உருவாக்க திட்டம் இருப்பதாக, காஞ்சிபுரம் நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நகராட்சி சார்பில், கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மூன்று நகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் உட்பட 44 நகராட்சி பள்ளிகள் காஞ்சிபுரத்தில் செயல்படுகின்றன. சுகாதாரத்தில், பிள்ளையார்பாளையம், செவிலிமேடு, திருக்காலிமேடு, பஞ்சுப்பேட்டை, ஓரிக்கை என ஐந்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் சுத்தமான நகரங்கள் பட்டியலில், காஞ்சிபுரம் நகராட்சி 200க்கும் அதிகமான இடத்தையை பிடிக்கிறது. மாநகராட்சியாக மாறிய பின், சுத்தமான நகரங்கள் பட்டியலில் முன்னுக்கு வருமா என, எதிர்பார்க்கப்படுகிறது.அண்ணாதுரை படித்ததுகாஞ்சிபுரம் பச்சையப்பன் தொடக்கப் பள்ளியில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை படித்தது குறிப்பிடத்தக்கது. 1866ம் ஆண்டு, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக, நகராட்சி கட்டடம், கட்டப்பட்டது. தற்போது 155 ஆண்டுகளானதால், 17 ஆயிரம் சதுரடியில் 8 கோடி ரூபாயில் புதிய நகராட்சி கட்டடம் கட்ட அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இதேபோல், சுதந்திரம் அடைவதற்கு முன்பாக, ஆங்கிலேயேன் ஜாக்சன் பெயரில் செங்கழுநீரோடை வீதியில் மார்க்கெட், செயல்பட்டது. அந்த மார்க்கெட், தற்போது நேரு மார்க்கெட்டாக அதே இடத்தில் செயல்பட்டு வருகிறது.காஞ்சிபுரம் நகராட்சியில் தற்போது, 51 வார்டுகளில் 380 தெருக்கள் உள்ளன. மாநகராட்சியாக மாறும்போது, இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.காஞ்சிபுரத்தில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை இருப்பதன் காரணத்தால், அம்ரூத்', 'ஹெரிடே' போன்ற மத்திய அரசின் திட்டங்கள் கிடைத்துள்ளன. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால், 'ஸ்மார்ட் சிட்டி', மேம்பாலங்கள் போன்ற திட்டங்கள் காஞ்சிபுரத்திற்கு கிடைக்கும். அதே சமயம், வரி இனங்கள், அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.நகராட்சியில் உள்ள குடியிருப்பு கட்டடங்கள் 50,730நகராட்சியில் உள்ள வணிக கட்டடங்கள் 4,900நகராட்சிக்கு வரி மூலம் கிடைக்கும் வருவாய் (ஆண்டுதோறும்) ரூ.34 கோடிநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்கள் 700 பேர்

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
26-ஆக-202116:10:07 IST Report Abuse
ocean ஒரு நடு நிலை அரசின் மக்கள் நலத்திட்ட செயல்பாடுகளில் விருப்பு வெறுப்பு இருத்தல் கூடாது.வேண்டியதற்கொரு மாதிரியும் வேண்டாததற்கு எதிரிடையாகவும் செய்வது சுயநலமாகும்.
Rate this:
Cancel
ocean - Kadappa,இந்தியா
26-ஆக-202116:03:30 IST Report Abuse
ocean அண்ணா பிறந்த இடம் அதனால் அதை மாநகராடசியாக்குகிறார்கள். அடுத்து திருக்குவளை மாநகராட்சியாகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X