சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி அரசு முத்திரை ஆவணங்கள் தயாரித்த 8 பேர் கைது

Added : ஆக 26, 2021
Share
Advertisement
திருப்போரூர்-நெல்லிக்குப்பம், ஊரப்பாக்கம் பகுதிகளில், போலி அரசு முத்திரை மற்றும் ஆவணங்களை தயாரித்து, பணம் வசூலித்த எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த, நெல்லிக்குப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், போலி அரசு முத்திரைகளை பயன்படுத்தி, போலி அரசு ஆவணங்கள் தயாரித்து, பணம் வசூலிக்கும் கும்பல் குறித்து, செங்கல்பட்டு

திருப்போரூர்-நெல்லிக்குப்பம், ஊரப்பாக்கம் பகுதிகளில், போலி அரசு முத்திரை மற்றும் ஆவணங்களை தயாரித்து, பணம் வசூலித்த எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த, நெல்லிக்குப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், போலி அரசு முத்திரைகளை பயன்படுத்தி, போலி அரசு ஆவணங்கள் தயாரித்து, பணம் வசூலிக்கும் கும்பல் குறித்து, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி., விஜயகுமாருக்கு தகவல் கிடைத்தது.சோதனைஇதையடுத்து, நேற்று முன்தினம், தனிப்படை போலீசார் மேற்கண்ட பகுதிகளில் வீடு, வணிக கடைகள் என, பல இடங்களில் சோதனை நடத்தினர்.அப்போது, நெல்லிக்குப்பம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில், பத்திர பதிவிற்கு பயன்படுத்தப்படும் அரசு முத்திரை தாள்கள், தாசில்தார், சார் - பதிவாளர் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் முத்திரைகள் போலியாக தயாரித்து வைத்திருந்தனர்.மேலும், ஊராட்சிகள், பேரூராட்சிகளில் பயன்படுத்தப்படும் வீட்டு வரி ரசீதுகள், நிலம் சம்பந்தமான பட்டா, சிட்டா போன்றவற்றையும் போலியாக தயாரித்து வைத்திருந்தனர். அங்கு, நான்கு பேர் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இருவருக்கு வலைவிசாரனையில், திருப்போரூர் அடுத்த, தண்டலம் தங்கராஜ், 45; இள்ளலூர் குமார். 50; கூடுவாஞ்சேரி அடுத்த, மாடம்பாக்கம் ஜோசப்ரைமன்ட் கிருஸ்டி, 45; தாம்பரம் மூர்த்தி, 47, என, தெரியவந்தது.அந்த நான்கு பேரையும், ஒன்பது பிரிவுகளின் கீழ், காயார் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் தொடர்புடைய இரண்டு பேரை தேடி வருகின்றனர்.போலி ஆவணங்கள் தயாரிக்க, அவர்கள் பயன்படுத்திய தாசில்தார், சார்- பதிவாளர் அதிகாரிகளுக்குரிய, 30க்கும் மேற்பட்டபோலி முத்திரைதாள் மற்றும் முத்திரைகளை கைப்பற்றினர்.கூடுவாஞ்சேரி அடுத்த, ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி மனைவி நந்தினி, 29, என்பவர், நகல் பிரதி எடுக்கும் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில், நேற்று முன்தினம், கூடுவாஞ்சேரி போலீசார், சோதனை நடத்தி, அங்கிருந்த போலியான பத்திர நகல், அரசு முத்திரைகள், அரசு ஆவணங்கள் மற்றும் நிலம் சம்பந்தமான போலி ஆவணங்களை கைப்பற்றினர்.போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஊரப்பாக்கம் நந்தினி, 29, அவரது கணவர் பாலாஜி,50, தாம்பரம் தண்டாயுதபாணி, 51, தனசேகரன், 44, ஆகிய நான்கு பேரை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X