உசிலம்பட்டியில் பாரம்பரிய நெல் விதை திருவிழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உசிலம்பட்டியில் பாரம்பரிய நெல் விதை திருவிழா

Added : ஆக 26, 2021
Share
உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் பாரம்பரிய நெல் விதை திருவிழா கிரியேட் நமது நெல்லை காப்போம், நம்மாழ்வார் இயற்கை வழி வேளாண்மை, விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் நடந்தது.கிரியேட் அமைப்பின்தலைவர் துரைசிங்கம் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற நீதிபதி சடையாண்டி, நம்மாழ்வார் இயற்கை வழி வேளாண்மை தலைவர் குரும்பன், வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன், துணை இயக்குனர் ராமசாமி,

உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் பாரம்பரிய நெல் விதை திருவிழா கிரியேட் நமது நெல்லை காப்போம், நம்மாழ்வார் இயற்கை வழி வேளாண்மை, விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் நடந்தது.

கிரியேட் அமைப்பின்தலைவர் துரைசிங்கம் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற நீதிபதி சடையாண்டி, நம்மாழ்வார் இயற்கை வழி வேளாண்மை தலைவர் குரும்பன், வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன், துணை இயக்குனர் ராமசாமி, தோட்டக்கலை துணை இயக்குனர் தாமரைச்செல்வி, 58 கிராம பாசன விவசாயிகள் சங்க செயலாளர் பெருமாள், மாவட்ட நன்செய், புன்செய்விவசாயிகள் சங்க தலைவர் மணிகண்டன், கிரியேட் திட்ட இயக்குனர் சுரேஷ் கண்ணன், வேளாண் நிபுணர் பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினர். பங்கேற்ற விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகள்இலவசமாக வழங்கப்பட்டன.

கிரியேட் தலைவர் துரைசிங்கம் கூறியதாவது: காட்டுயானம், கருப்புகவுனி, சீரகச்சம்பா, கருங்குறுவை, துாயமல்லி உள்ளிட்ட பாரம்பரிய நெல் விதைகள் இலவசமாக வழங்கப்பட்டன. பாரம்பரிய நெல் உணவு மூலமாக கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும். முடிந்தளவு இயற்கை உரங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X