பொது செய்தி

தமிழ்நாடு

புரையோடிப்போன புளியங்குளம் கண்மாய்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம் : மதுரை திருநகரிலிருந்து விளாச்சேரிக்கு செல்லும் வழியில் உள்ளது புளியங்குளம் கண்மாய். பல ஆண்டுகளாக கழிவுநீர் தேங்கி சுகாதாரமற்ற நிலையிலுள்ள கண்மாய் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.வைகை அணை தண்ணீர் மூலம் இக்கண்மாய் நிரம்பும். இத்தண்ணீர் மூலம் 40 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. பல ஆண்டுகளாக திருநகரின் ஒரு

திருப்பரங்குன்றம் : மதுரை திருநகரிலிருந்து விளாச்சேரிக்கு செல்லும் வழியில் உள்ளது புளியங்குளம் கண்மாய். பல ஆண்டுகளாக கழிவுநீர் தேங்கி சுகாதாரமற்ற நிலையிலுள்ள கண்மாய் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

வைகை அணை தண்ணீர் மூலம் இக்கண்மாய் நிரம்பும். இத்தண்ணீர் மூலம் 40 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. பல ஆண்டுகளாக திருநகரின் ஒரு பகுதி மற்றும் விரிவாக்கப்பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கண்மாய்க்குள் விடப்படுகிறது.இறைச்சி, மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளும் கொட்டப்படுகின்றன.

புளியங்குளம் கண்மாய் நீர்பாசன விவசாயிகள் சங்க செயலாளர் மணிக்கலையரசன் கூறியதாவது: கண்மாய்க்குள் 15 அடி ஆழத்திற்கு கசடுகள் தேங்கியுள்ளன. அதன்மீது கழிவுநீர் நிற்பதால் சுகாதாரமற்று துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்களை பரப்புகின்றன.

சுகாதாரமற்ற இத்தண்ணீர் விவசாயத்திற்கு உகந்ததாக இல்லாததால் 20 ஆண்டுகளாக பயன்படுத்துவதில்லை. விவசாயம் இல்லாததால் நிலங்களில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கழிவுநீர் வெளியேற வழியின்றி பல ஆண்டுகளாக தேங்கியுள்ளதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு 2 கி.மீ., சுற்றுக்கு வீடுகளிலும் ஆழ்குழாய்கள், கிணறுகளில் தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை. கண்மாயிலுள்ள கசடுகளை அகற்றி கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். சுற்றிலும் பூங்கா அமைக்க வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீரை சுத்தம் செய்து வெளியேற்ற வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X