பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி, கல்லூரி செய்திகள்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
ஆண்டு மலர் வெளியீட்டு விழாமதுரை விருதுநகர் ஹிந்து நாடார் மேல்நிலை பள்ளி ஆண்டு மலர் வெளியீட்டு விழா தாளாளர் கணேசன் தலைமையில் நடந்தது. தலைவர் பிரபாகரன், துணை தலைவர் வெற்றிவேல், பொருளாளர் மோகன், ஆசிரியர்கள் பங்கேற்றனர். வங்கி உதவி பொது மேலாளர் கவுதமன் ஆண்டு மலரை வெளியிட பள்ளி செயலாளர் ராஜ்குமார் பெற்றார்.முன்னாள் மாணவர்கள் நிதியுதவிமதுரை ஒத்தக்கடை அரசு ஆண்கள்

ஆண்டு மலர் வெளியீட்டு விழா

மதுரை விருதுநகர் ஹிந்து நாடார் மேல்நிலை பள்ளி ஆண்டு மலர் வெளியீட்டு விழா தாளாளர் கணேசன் தலைமையில் நடந்தது. தலைவர் பிரபாகரன், துணை தலைவர் வெற்றிவேல், பொருளாளர் மோகன், ஆசிரியர்கள் பங்கேற்றனர். வங்கி உதவி பொது மேலாளர் கவுதமன் ஆண்டு மலரை வெளியிட பள்ளி செயலாளர் ராஜ்குமார் பெற்றார்.

முன்னாள் மாணவர்கள் நிதியுதவி
மதுரை ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 1990 - 1997 படித்த முன்னாள் மாணவர்கள் நிதியுதவியுடன் அலங்கார வளைவு கட்ட பூமி பூஜை நடந்தது. தலைமையாசிரியர் வினோத் தலைமை வகித்தார். இதே மாணவர்கள் இதற்கு முன் பள்ளியில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்க ரூ.ஒரு லட்சம் வழங்கினர்.

வெர்ச்சுவல் கிளப் துவக்க விழா
மதுரை லேடிடோக் கல்லுாரியில் பயோ டெக்னாலஜி துறை சார்பில் 'வெப்ஸ்' மற்றும் 'சிப்ஸ்' என்ற 'வெர்ச்சுவல் கிளப்' துவக்க விழா நடந்தது. மாணவிகள் ஜெனிஷா, ஸ்வாதி வரவேற்றனர். சூழலியல் நிபுணர் சுல்தான் அகமது இஸ்மாயில் பேசினார். துறைத்தலைவர் ரோஷன் ஆரா பேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவி ஜாய் வில்சன் தொகுத்து வழங்கினார். மாணவி அக் ஷயா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X