போலீஸ் செய்திகள்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
விமான பாதுகாப்பு படை வீரர் வீட்டில் கொள்ளைசிந்துபட்டி: தும்மக்குண்டு ரஞ்சித் குமார் 35, மதுரை விமான நிலைய பாதுகாப்பு படை வீரராக உள்ளார். பெருங்குடியில் வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கியுள்ளார். இவரது தும்மக்குண்டு வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த டிவி., வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தன. போலீசார் விசாரிக்கின்றனர்.குண்டர் சட்டத்தில் கைதுமதுரை: மதுரை

விமான பாதுகாப்பு படை வீரர் வீட்டில் கொள்ளை
சிந்துபட்டி: தும்மக்குண்டு ரஞ்சித் குமார் 35, மதுரை விமான நிலைய பாதுகாப்பு படை வீரராக உள்ளார். பெருங்குடியில் வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கியுள்ளார். இவரது தும்மக்குண்டு வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த டிவி., வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தன. போலீசார் விசாரிக்கின்றனர்.

குண்டர் சட்டத்தில் கைது
மதுரை: மதுரை ஒத்தக்கடை மலைச்சாமிபுரம் கார்த்திக் 30. இவர் மீது பலாத்கார வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.இவரை மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம் பரிந்துரைபடி குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அனீஷ்சேகர் உத்தரவிட்டார்.

கஞ்சா விற்றவர் கைது
மேலுார்: அ.வலையபட்டியில் மேலவளவு போலீசார்ரோந்து சென்ற போது கஞ்சா விற்ற செல்வத்தை 29, கைது செய்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

டூவீலர்கள் மோதல்; ஒருவர் பலி
பேரையூர்: எழுமலை பெருமாள்பட்டி சுந்தரம். இவர் மகனுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கயிருந்தது. இதற்கு அழைப்பிதழ் வழங்க இவரும், மனைவி சுப்புலட்சுமியும் 59, டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) டி.கல்லுபட்டி சென்றனர். பேரையூர் முக்குசாலை அருகே எதிரே வந்த அழகர்சாமி (ஹெல்மெட் அணியவில்லை) டூவீலர் நேருக்கு நேர் மோதியது. இதில் சுப்புலட்சுமி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

கார் கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி, 3 பேர் காயம்
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் விருவீடுக்கு நேற்று மாலை 5:00 மணியளவில் காரில் விருவீடைச் சேர்ந்த வசந்தகுமார் 22, வெள்ளைமலைப்பட்டியைச் சேர்ந்த பிரதீப்குமார், விசால், அழகேஷ் ஆகிய நால்வரும் சென்றனர்.வெள்ளைமலைப்பட்டி அருகே கார் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. வசந்தகுமார் அதே இடத்தில் பலியானார். மற்ற மூவரும் காயமடைந்தனர். உத்தப்பநாயக்கனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X