3 பெண்கள் உட்பட 9 பேர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமனம்: மத்திய அரசு ஒப்புதல்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
புதுடில்லி: கொலீஜியம் பரிந்துரையை ஏற்று 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 பேரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு உள்ளது.இதற்கான பரிந்துரையை அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பின்னர்
 3 பெண்கள் உட்பட 9 பேர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமனம்: மத்திய அரசு ஒப்புதல்

புதுடில்லி: கொலீஜியம் பரிந்துரையை ஏற்று 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 பேரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு உள்ளது.

இதற்கான பரிந்துரையை அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் முறைப்படி நீதிபதிகள் பதவியேற்றுக் கொள்வர். ஒரே நேரத்தில் 9 பேரின் பெயர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவது இதுவே முதன்முறை. இந்த 9 பேரில் 8 பேர் நீதிபதிகள் ஒருவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டியலில், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா, குஜராத் தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி, தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹீமா கோலி, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா, நீதிபதி சி.டி.ரவிக்குமார், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பேலா எம்.திரிவேதி மற்றும் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முன்னதாக கடந்த 17ம் தேதி நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.எம்.கான்வில்கார், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய கொலீஜியம் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அந்தக் கூட்டத்தில் தான் இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

கொலீஜியம் முதன்முறையாக ஒரே தீர்மானத்தில் மூன்று பெண் நீதிபதிகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்குப் பரிந்துரைத்துள்ளது. நீதிபதிகள் நாகரத்னா, ஜே.கே.மகேஸ்வரி மற்றும் பேலா திரிவேதி ஆகியோர் தான் அந்த மூன்று பெண் நீதிபதிகள் ஆவர்

கொலீஜியம் பரிந்துரைத்துள்ள 9 பேரில், நீதிபதிகள் நாகரத்னா, நரசிம்மா, விக்ரம் நாத் ஆகியோருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், கூடுதல் சாலிசிட்டர் ஜெனரலாகப் பதவிவகித்த நரசிம்மா உச்ச நீதிமன்றத்துக்கு நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக 8 பேர் இதுபோல் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X