சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சீர்காழி அருகே குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புதுப்பட்டினம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிக்குத் திருமணம் பெற்றோர்கள், ஏற்பாட்டின்படி நடைபெறுவதாக இருந்தது. இதற்காக மணமகன் மணமகள் ஆகிய இருதரப்பினரும் அழைப்பிதழ்கள் அச்சடித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்திருந்தனர்.இந்நிலையில், திருமணம் நடைபெற உள்ள

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புதுப்பட்டினம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிக்குத் திருமணம் பெற்றோர்கள், ஏற்பாட்டின்படி நடைபெறுவதாக இருந்தது. இதற்காக மணமகன் மணமகள் ஆகிய இருதரப்பினரும் அழைப்பிதழ்கள் அச்சடித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்திருந்தனர்.
இந்நிலையில், திருமணம் நடைபெற உள்ள சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்ற தகவலை அறிந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் இதை சீர்காழி சப்-கலெக்டர் நாராயணனிடம் தெரிவித்தனர். இதையடுத்து சப்-கலெக்டர் நாராயணன், சீர்காழி தாசில்தார் சண்முகத்திடம் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
சப்-கலெக்டர் உத்தரவின் பேரில், சீர்காழி தாசில்தார் சண்முகம் மற்றும் புதுப்பட்டினம் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் அப்பகுதியை சேர்ந்த ஆர்.ஐ., வி.ஏ.ஓ., ஆகியோர் மற்றும் வருவாய் துறையினர் நேரில் சென்று மணப்பெண் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சான்றிதழ்கள் சரிபார்த்த போது பெண்ணிற்கு 18 வயது பூர்த்தியாக இன்னும் ஆறு மாத காலம் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து குழந்தை திருமண சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து திருமணத்தைத் தடுத்து நிறுத்தினார். மேலும், இரு தரப்பு பெற்றோர்களும் இதுகுறித்து விளக்கம் அளித்து எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததை தொடர்ந்து திருமணத்தை தடுத்து நிறுத்தி தாசில்தார் சண்முகம் நடவடிக்கை எடுத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X