பொது செய்தி

இந்தியா

'சைகோவ் - டி' தடுப்பூசி: என்.டி.ஏ.ஜி.ஐ., ஆலோசனை

Added : ஆக 26, 2021
Share
Advertisement
புதுடில்லி : கொரோனா தொற்றை தடுக்க 18- 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு 'சைடஸ் கேடிலா' நிறுவனத்தின் 'சைகோவ் - டி' தடுப்பூசியை போடுவது பற்றி விரைவில் முடிவு எடுக்கப்படும் என என்.டி.ஏ.ஜி.ஐ. எனப்படும் தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தெரிவித்துள்ளது.நாட்டில் கொரோனாவுக்கு எதிராக சீரம் நிறுவனத்தின் 'கோவிஷீல்டு', பாரத் பயோடெக் நிறுவனத்தின் 'கோவாக்சின்',


புதுடில்லி : கொரோனா தொற்றை தடுக்க 18- 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு 'சைடஸ் கேடிலா' நிறுவனத்தின் 'சைகோவ் - டி' தடுப்பூசியை போடுவது பற்றி விரைவில் முடிவு எடுக்கப்படும் என என்.டி.ஏ.ஜி.ஐ. எனப்படும் தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனாவுக்கு எதிராக சீரம் நிறுவனத்தின் 'கோவிஷீல்டு', பாரத் பயோடெக் நிறுவனத்தின் 'கோவாக்சின்', ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் வி', அமெரிக்காவின் 'மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன்' ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.ஆறாவதாக சைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்துள்ள 'சைகோவ் - டி' தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதியை மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அளித்துள்ளது.உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி உலகிலேயே மரபணு அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள முதல் தடுப்பூசி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த தடுப்பூசியை பயன்படுத்துவது பற்றி என்.டி.ஏ.ஜி.ஐ. தலைவர் டாக்டர் என்.கே.அரோரா நேற்று கூறியதாவது:

நாட்டில் 12 - 18 வயதிற்குட்பட்டோர் 12 கோடிக்கும் அதிகமானோர் உள்ளனர். இவர்களில் ஒரு சதவீதம் பேர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு சைகோவ் - டி தடுப்பூசியை போடுவது பற்றி ஆலோசிக்க என்.டி.ஏ.ஜி.ஐ.யின் கூட்டம் விரைவில் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் சிறுவர், சிறுமியருக்கு எப்படி தடுப்பூசி போடுவது என்பது பற்றியும் முடிவு செய்யப்படும்.செப்டம்பரில் சைகோவ் - டி தடுப்பூசி போடும் பணி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X