பொது செய்தி

தமிழ்நாடு

தற்காலிக பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு தர வேண்டும் : கவுரவ விரிவுரையாளர்கள் வலியுறுத்தல்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
மதுரை : “அரசு துறைகளில் பணியாற்றும் தற்காலிக பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு சலுகை அளிக்க வேண்டும்” என தமிழ்நாடு அனைத்து அரசு கல்லுாரி யு.ஜி.சி., தகுதி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் மாநில தலைவர் தங்கராஜ் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில் அரசு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 270 நாட்களில் இருந்து 365 நாட்களாக



மதுரை : “அரசு துறைகளில் பணியாற்றும் தற்காலிக பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு சலுகை அளிக்க வேண்டும்” என தமிழ்நாடு அனைத்து அரசு கல்லுாரி யு.ஜி.சி., தகுதி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் மாநில தலைவர் தங்கராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:

தமிழகத்தில் அரசு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 270 நாட்களில் இருந்து 365 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சலுகை நிரந்தரமாக பணியாற்றுவோருக்கு மட்டுமின்றி அரசு கட்டுப்பாட்டில் உள்ள உயர் கல்வி, பள்ளிக் கல்வி உள்ளிட்ட துறைகளிலும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பெண்களுக்கும் வழங்க வேண்டும்.தற்காலிக பணியாளர்களுக்கு தற்போது ஒருவாரம் விடுப்பு கிடைப்பது கூட கடினம். அதனை மீறி விடுப்பு எடுத்தால் அவர் பணியாற்றிய இடத்தில் வேறு ஒருவரை நியமிக்கின்றனர்.

மகப்பேறு விடுப்பில் செல்லும் பெண்களிடம் 'தாமாகவே இப்பணியில் இருந்து வெளியேறுகிறேன்' என கடிதம் பெற்றுக் கொள்கின்றனர்.பெரும்பாலும் அரசு கல்லுாரி, பள்ளிகளில் இதுபோல் பலர் வேலை இழந்துள்ளனர். பிரசவ வலி என்பது நிரந்தர மற்றும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பெண்களுக்கும் ஒன்று தான். சென்னை உயர்நீதிமன்றமும் தொகுப்பூதியத்தில் பணியாற்றுவோருக்கும் விடுப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. அரசு துறைகளில் தற்காலிகமாக பணியாற்றும் மகளிர் கவுரவ விரிவுரையாளர் உட்பட அனைத்து மகளிருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X