பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ்வழி சான்று : அரசு பணி கனவாகிவிடும் அச்சத்தில் போட்டியாளர்கள்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
மதுரை : அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் 20 சதவீதம் தமிழ்வழி இடஒதுக்கீடு பெற 1 - 12ம் வகுப்பு வரை தமிழில் படித்ததற்காக சான்றுகளை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் அரசு பணி கனவாகி விடும் சூழல் ஏற்பட்டுள்ளது.அரசு பணி தேர்வு போட்டியாளர்கள் பட்டப்படிப்பை தமிழில் படித்ததற்கான சான்றுகளை சமர்ப்பித்து இடஒதுக்கீடு சலுகை பெற்று தேர்வில்



மதுரை : அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் 20 சதவீதம் தமிழ்வழி இடஒதுக்கீடு பெற 1 - 12ம் வகுப்பு வரை தமிழில் படித்ததற்காக சான்றுகளை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் அரசு பணி கனவாகி விடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அரசு பணி தேர்வு போட்டியாளர்கள் பட்டப்படிப்பை தமிழில் படித்ததற்கான சான்றுகளை சமர்ப்பித்து இடஒதுக்கீடு சலுகை பெற்று தேர்வில் பங்கேற்றனர். இதில் 1ம் வகுப்பு முதல் கல்லுாரி வரை ஆங்கில வழியில் படித்தவர்கள், தொலைதுார கல்வியில் தமிழில் படித்து பட்டம் பெற்று அந்த சான்றை வைத்து தமிழ்வழி இடஒதுக்கீட்டை பயன்படுத்தினர். இதனால் தமிழ்வழியிலேயே பள்ளி, கல்லுாரி படிப்பை படித்தவர்களுக்கு போட்டி அதிகமாகி அரசு பணி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கூறியதாவது:

இதுதொடர்பான வழக்கில் நீதிமன்றம் உத்தரவுபடி பட்டப்படிப்பை தகுதியாக கொண்ட குரூப் 1 தேர்வில் 1 - 12ம் வகுப்பு வரை தமிழ்வழியில் பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அரசு தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதனால் 6 - 12ம் வகுப்பு வரை பள்ளி படிப்பையும், பட்டப்படிப்பையும் தமிழ்வழியில் முடித்த போட்டி தேர்வு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உதாரணமாக 1 - 5ம் வகுப்பு வரை சிலர் ஆங்கில வழியில் படித்திருப்பார்கள் அல்லது வெவ்வேறு பள்ளியில் சேர்ந்து தமிழ் வழியில் படித்திருப்பார்கள். அந்த பள்ளிகளுக்கு சென்று தமிழ்வழியில் படித்ததற்கான சான்று கேட்டு பெறுவது இயலாத காரியம். 5ம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படித்தவர்கள், புதிய விதிப்படி தமிழ்வழி இடஒதுக்கீட்டில் தேர்வு எழுத முடியாது. அதற்கு பதில் 6 - 12ம் வகுப்பு வரை மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு தமிழ்வழி இடஒதுக்கீடு சலுகை பொருந்தும் என தேர்வாணையம் அறிவிக்க வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X