கோர்ட் செய்தி

தமிழ்நாடு

செப்.,1 முதல் அனைத்து வாகனங்களுக்கும் 5 ஆண்டுகள் 'பம்பர் டூ பம்பர்' காப்பீடு கட்டாயம்

Updated : ஆக 26, 2021 | Added : ஆக 26, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை: ‛‛செப்., 1-ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும்,'' என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஒகேனக்கல்லில் கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சாலை விபத்தில் மரணமடைந்த சடையப்பன் என்பவரின் குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு ஈரோடு மோட்டார் வாகன விபத்து
ChennaiHC, 5Years, Bumper To Bumper, Insurance, 5 Years, Mandatory, All Vehicles, September 1, High Court, Orders, சென்னை, உயர்நீதிமன்றம், வாகனங்கள், இன்சூரன்ஸ், காப்பீடு, பம்பர் டூ பம்பர், கட்டாயம், சென்னை, உயர்நீதிமன்றம்

சென்னை: ‛‛செப்., 1-ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும்,'' என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒகேனக்கல்லில் கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சாலை விபத்தில் மரணமடைந்த சடையப்பன் என்பவரின் குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு ஈரோடு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சடையப்பன் குடும்பத்திற்கு 14 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து நியூ இந்தியா அஷுரன்ஸ் நிறுவனம் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.


latest tamil news


வாகனத்திற்கான ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் என்ற அடிப்படையில் மட்டுமே காப்பீடு எடுக்கப்பட்டதாகவும், ஓட்டுனர் அல்லாத ஒருவர் இறப்பிற்கு ஒரு லட்ச ரூபாய் மட்டுமே இழப்பீடு வழங்க முடியுமென காப்பீட்டு நிறுவனம் தெரிவித்தது. சடையப்பன் வாகன ஓட்டுநராக அடையாளப்படுத்தப்பட்டு இருந்தாலும் விபத்து நடந்தபோது அவர் வாகனத்தை இயக்கவில்லை என்று காப்பீட்டு நிறுவனம் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வைத்தியநாதன், ஈரோடு தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.


latest tamil news


நீதிபதி கூறுகையில், ‛‛புதிய வாகனத்தை வாங்கும் போது அது எவ்வாறு செயல்படும் எனத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டும் மக்களுக்கு, காப்பீடு நடைமுறைகள் முழுமையாக தெரிவதில்லை. வாகனங்கள் வாங்குபவர்களுக்கு விற்பனையாளர்களும் காப்பீடு தொடர்பான விவரங்களை முழுமையான தெரிவிப்பதில்லை,'' என்றார். மேலும், வரும் செப்.,1-ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் ‛பம்பர் டூ பம்பர்' என்ற அடிப்படையில் வாகன உரிமையாளர், ஓட்டுனர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில், 5 ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக காப்பீட்டு நிறுவனங்களுக்கு தமிழக போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் எனவும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது தொடர்பாக செப்டம்பர் 30ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
visu - Pondicherry,இந்தியா
26-ஆக-202119:30:43 IST Report Abuse
visu இன்சூரன்ஸ் ஒரு பெரும் கொள்ளை லட்சம் பேரில் ஒருவர் தான் கிளைம் செய்வார் அதுவும் இது போன்ற கோர்ட் கேஸ்களுக்கு பின்பு இதில் நிறைய திருத்தங்கள் தேவை பிரீமியம் தொகை மிக அதிகமாக உள்ளது
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
26-ஆக-202116:07:28 IST Report Abuse
sankaseshan நமது ஜனங்களும் கில்லாடிகள் முடிந்தவரை ஏமாற்றுவார்கள்
Rate this:
Cancel
Indian - chennai,இந்தியா
26-ஆக-202115:52:31 IST Report Abuse
Indian பம்பர் டு பம்பர் இன்சூரன்ஸ்க்கும் விபத்துக்கும் என்ன சம்பந்தம் , இது இன்சூரன்ஸ் வாழ வைப்பட்டதற்காகவா ?. விபத்தானப்பிறகு இன்சூரன்ஸ் - ஐ claim பண்ணிப்பாருங்க , இன்சூரன்ஸ் யாருன்னு தெரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X