நிதி அமைச்சர் பேச்சால் அரசுக்கு அவப்பெயர்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
சிவகங்கை : ''தமிழக அரசு ஊழியர்களுக்கு எதிரான நிதி அமைச்சர் தியாகராஜனின் பேச்சு, அணுகு முறை அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்,'' என தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் ப.குமார் தெரிவித்தார்.அவர் கூறியதாவது : மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசு அகவிலைப்படி வழங்கும் திட்டத்தை 9 மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளதாக



சிவகங்கை : ''தமிழக அரசு ஊழியர்களுக்கு எதிரான நிதி அமைச்சர் தியாகராஜனின் பேச்சு, அணுகு முறை அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்,'' என தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் ப.குமார் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது :

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசு அகவிலைப்படி வழங்கும் திட்டத்தை 9 மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளதாக அறிவித்தது அரசு ஊழியர்கள் மத்தியில் வேதனை அளித்துள்ளது. இந்நிலையில் நிதி அமைச்சர் தியாகராஜன் அகவிலைப்படி உயர்வை தள்ளி வைத்ததை நியாயப்படுத்தி, அரசு ஊழியர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியுள்ளார்.

பட்ஜெட்டில் அரசு ஊழியர் சம்பளம், பென்ஷனுக்காக ஆண்டுக்கு 27 சதவீத செலவினம் ஆகிறது என்று தெரிவித்தார். ஆனால் பழைய பென்ஷன் திட்டம் வந்தால் அரசு கஜானா 100 சதவீதம் காலியாகிவிடும் என்பது போன்ற பேச்சில் முரண்பாடு உள்ளது. இது போன்று நிதி அமைச்சரின் பேச்சுக்கு முதல்வர் தடை விதிக்க வேண்டும். ஆசிரியர், அரசு ஊழியர், பணியாளர் சங்கங்களை அழைத்து பேசி பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டுவர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X