அரசியல் செய்தி

தமிழ்நாடு

விஜயகாந்திற்கு முதல்வர் வாழ்த்து

Added : ஆக 26, 2021
Share
Advertisement
சென்னை : தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சில ஆண்டுகளாகவே உடல்நலம் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். அரசியல் பணிகளில் இருந்து விலகி, வீட்டில் ஓய்வில் உள்ளார். அவர் தன், 70வது பிறந்த நாளை, நேற்று கொண்டாடினார்.கொரோனா பாதிப்பால், தனக்கு வாழ்த்து தெரிவிக்க,


சென்னை : தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சில ஆண்டுகளாகவே உடல்நலம் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். அரசியல் பணிகளில் இருந்து விலகி, வீட்டில் ஓய்வில் உள்ளார். அவர் தன், 70வது பிறந்த நாளை, நேற்று கொண்டாடினார்.கொரோனா பாதிப்பால், தனக்கு வாழ்த்து தெரிவிக்க, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வர வேண்டாம் என, கூறி இருந்தார். இதனால், அவரது வீட்டில், எளிமையாக நிகழ்ச்சி நடந்தது. இதில், விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்கள் விஜயபிரபாகரன், சண்முகபாண்டியன் மற்றும் உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், நண்பர்கள் பலரும், தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X