ரயில்களில் அதிக சரக்குகளை கையாள மேலாளர் அழைப்பு

Added : ஆக 26, 2021
Share
Advertisement
மதுரை : ரயில்களில் அதிக சரக்குகளை கையாள முன்வர வேண்டும் என துாத்துக்குடியில் தொழில் வர்த்தக பிரமுகர்களுக்கு மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பி.அனந்த் அழைப்பு விடுத்தார்.துாத்துக்குடியிலிருந்து சரக்கு ரயில்களில் நிலக்கரி, ஜிப்ஸம், உரம் அதிகளவில் அனுப்பப்படுகின்றன. ஸ்டெர்லைட் ஆலை இயங்கிய போது காப்பர் அதிகளவில் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.


மதுரை : ரயில்களில் அதிக சரக்குகளை கையாள முன்வர வேண்டும் என துாத்துக்குடியில் தொழில் வர்த்தக பிரமுகர்களுக்கு மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பி.அனந்த் அழைப்பு விடுத்தார்.
துாத்துக்குடியிலிருந்து சரக்கு ரயில்களில் நிலக்கரி, ஜிப்ஸம், உரம் அதிகளவில் அனுப்பப்படுகின்றன. ஸ்டெர்லைட் ஆலை இயங்கிய போது காப்பர் அதிகளவில் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இதன் மூலம் ரயில்வேக்கு கணிசமான வருவாய் கிடைத்தது.இந்நிலையில் துாத்துக்குடியில் கோட்ட மேலாளர் சரக்கு போக்குவரத்து மேம்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார். துறைமுக பொறுப்புகழக தலைவர் டி.கே.ராமச்சந்திரன், ஸ்பிக் நிறுவன இயக்குனர்கள் ராமகிருஷ்ணன், பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். துறைமுகத்திலுள்ள ரயில்வே சரக்கு போக்குவரத்து ரயில் பாதையையும் கோட்ட மேலாளர் ஆய்வு செய்தார்.

ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'கடந்தாண்டை விட இந்தாண்டு நிலக்கரி 170 சதவீதம், டிராக்டர்கள் 413.9 சதவீதம் சரக்கு ரயில்களில் அதிகம் கையாளப்பட்டுள்ளன. சரக்கு போக்குவரத்தில் துாத்துக்குடி பங்களிப்பு முக்கியமானதாகும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X