பொது செய்தி

தமிழ்நாடு

ஆக.,29,30ல் அதீத கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

Updated : ஆக 26, 2021 | Added : ஆக 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: ‛‛தமிழகத்தில் ஆக.,29, 30 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது,'' என, சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வெப்பச்சலனம் காரணமாக ஆக.,30 வரை கனமழை தொடரும்.இன்று(ஆக.,26) செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல்,
தமிழகம், மழை, கனமழை, சென்னை வானிலை மையம், வானிலை மையம், புவியரசன், மாவட்டங்கள்

சென்னை: ‛‛தமிழகத்தில் ஆக.,29, 30 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது,'' என, சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வெப்பச்சலனம் காரணமாக ஆக.,30 வரை கனமழை தொடரும்.


இன்று(ஆக.,26)

செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, தேனி, புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்


நாளை (ஆக.,27)


செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, திருவண்ணாமலை, சேலம், புதுச்சேரி பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மற்ற இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
30-ம் தேதி வரை கன மழை பெய்ய வாய்பு உள்ளது.

தமிழகத்தில் ஆக.,29, 30 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.வரும் 29 ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசியிலும்
ஆக.,30ல் நீலகிரி, கோவை, திருப்பூரிலும் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.



சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.


latest tamil news



மீனவர்களுக்கான எச்சரிக்கை


ஆக.,29 வரை மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்
ஆக., 30 வரை கேரள கடற்கரை பகுதிகள், லட்சத்தீவு, தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் புவியரசன் தெரிவித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
26-ஆக-202116:38:44 IST Report Abuse
rajan . சென்னையில் பலத்த மழை பெய்யும் என்று இரண்டு நாளா புருடா விட்டு கினு இருக்கிங்க..... வெயில்தான் பின்னி எடுக்குது.... சித்திரை வெயிலே தோற்றது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X