ஐ.நா. ஊழியர்கள் மீது தலிபான்கள் தாக்குதல்

Updated : ஆக 26, 2021 | Added : ஆக 26, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
காபூல்: ஆப்கானிஸ்தானில் ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்களைத் தலிபான்கள் தாக்கிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில் தெரிவித்துள்ளதாவது: காபூல் விமான நிலையத்துக்குத் தப்பி செல்ல இருந்த ஐ.நா., சபையின் ஊழியரை தலிபான்கள் விரட்டி சென்று தாக்கினர். மேலும், காபூலில் இருந்த மற்றொரு ஊழியரும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்.
காபூல், தலிபான்கள், ஐ.நா, ஊழியர்கள், தாக்குதல்,

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்களைத் தலிபான்கள் தாக்கிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில் தெரிவித்துள்ளதாவது: காபூல் விமான நிலையத்துக்குத் தப்பி செல்ல இருந்த ஐ.நா., சபையின் ஊழியரை தலிபான்கள் விரட்டி சென்று தாக்கினர். மேலும், காபூலில் இருந்த மற்றொரு ஊழியரும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார். அங்கிருக்கும் ஊழியர்களுக்கு தலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இச்சம்பவத்தை ஐக்கிய நாடுகள் சபையும் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் விசாரணை செய்து வருகிறோம். காபூலில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளவர்கள் தான் அங்குள்ள அதிகாரிகளின் பாதுகாப்புக்குப் பொறுப்பு,” என்று தெரிவித்தார். எனினும், தலிபான்கள் இந்தத் தாக்குதலுக்கு இதுவரை விளக்கம் ஏதும் தரவில்லை.

ஆப்கனில் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலிபான்கள் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் ஆகஸ்ட் 31ம் தேதிக்குப் பின்னரும் கூட ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் வெளியேறலாம் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
30-ஆக-202113:37:06 IST Report Abuse
திரு.திருராம் \\\\\\யாருப்பா புதுசா இந்த திரு.திருராம் பட்டைய கெளப்புறாப்புல. நம்மை போல் இந்திய தேச அபிமானியோ? அது சரி திருபுரம் என்கிற ஊர் எங்க இருக்கு\\\\உங்க பழைய சங்கீ சக்ரீ சனந்தகிதான், இந்த பேரை வச்சுக்ககூடாதுன்னு நாட்டாமை சட்டம்போட்டுட்டாங்க, அதுனால நம்மபேரு திரு.திருராம்
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
27-ஆக-202106:15:57 IST Report Abuse
SUBBU யாருப்பா புதுசா இந்த திரு.திருராம் பட்டைய கெளப்புறாப்புல.நம்மை போல் இந்திய தேச அபிமானியோ? அது சரி திருபுரம் என்கிற ஊர் எங்க இருக்கு?
Rate this:
Cancel
மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா
27-ஆக-202106:12:23 IST Report Abuse
மு. செந்தமிழன் காட்டுமிராண்டி கூட்டம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X