ஆப்கன் பயங்கரவாதிகளை ஊடுருவ விட மாட்டோம்: முப்படை தளபதி உறுதி

Updated : ஆக 26, 2021 | Added : ஆக 26, 2021 | |
Advertisement
புதுடில்லி: ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அங்கு சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்த பயங்கரவாதிகளை விடுவித்து உள்ளனர். 'ஆப்கனில் இருந்து பயங்கரவாதிகள் பக்கத்து நாடுகளுக்கு, குறிப்பாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிக்கலாம்' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், 'ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளை ஊடுருவ விட மாட்டோம்' என, முப்படை

புதுடில்லி: ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அங்கு சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்த பயங்கரவாதிகளை விடுவித்து உள்ளனர். 'ஆப்கனில் இருந்து பயங்கரவாதிகள் பக்கத்து நாடுகளுக்கு, குறிப்பாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிக்கலாம்' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.



latest tamil news




இந்நிலையில், 'ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளை ஊடுருவ விட மாட்டோம்' என, முப்படை தளபதி விபின்ராவத் தெரிவித்துள்ளார். டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற விபின் ராவத் பேசியதாவது:
ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றுவார்கள் என இந்தியா எதிர்பார்த்தது. அதற்கு 2 மாதங்கள் ஆகும் என்று கருதியது. ஆனால் குறுகிய காலத்துக்குள்ளேயே தலிபான்கள் ஆப்கனை கைப்பற்றியது ஆச்சரியம் அளிக்கிறது.


latest tamil news




தற்போது தலிபான்களின் கூட்டாளிகள் மாறி இருக்கிறார்கள். ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு, அங்கிருந்து இந்தியாவுக்குள் பயங்கரவாத நடவடிக்கைகள் ஊடுருவக்கூடும் என்பதில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. அந்த நாட்டில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் எந்த பயங்கரவாத நடவடிக்கைகளையும் ஒடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்கான திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X