அரசியல் செய்தி

தமிழ்நாடு

நதியே நஞ்சாக மாறி நிற்பது பெருங்கவலை: சீமான்

Updated : ஆக 26, 2021 | Added : ஆக 26, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
சென்னை: பாலாற்றில் தொழிற்சாலைக் கழிவுகளைக் கலக்கும் சுத்திகரிப்பு ஆலைகளின் பேரழிவுப்போக்கினை தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், நதியே நஞ்சாக மாறி நிற்கும் நிலை கவலை அளிப்பதாகவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விசாரம் பகுதியில் கடந்த 20
NTK, Seeman, நாம் தமிழர் கட்சி, சீமான், பாலாறு, கழிவுநீர்

சென்னை: பாலாற்றில் தொழிற்சாலைக் கழிவுகளைக் கலக்கும் சுத்திகரிப்பு ஆலைகளின் பேரழிவுப்போக்கினை தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், நதியே நஞ்சாக மாறி நிற்கும் நிலை கவலை அளிப்பதாகவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விசாரம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தனியார் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் தொழிற்சாலைக் கழிவுகளைச் சுத்திகரிக்காது பாலாற்றில் கலந்துவிடும் செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். தோல் பதனிடுதல், சாயத் தொழில், சர்க்கரைத் தொழில்கள் போன்ற நீர் சார்ந்த தொழில்கள் மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் பாலாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. இவற்றில் உருவாகும் ரசாயன கழிவுகள் சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு, தொழிற்சாலையின் மறுபயன்பாட்டிற்கு உகந்த வகையில் சுத்திகரிக்கப்படவேண்டும்.


latest tamil news


ஆனால், தொழிற்சாலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாத அல்லது ஓரளவு மட்டும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுகளை அதிக அளவில் ஆற்றிலே விடப்படுகிறது. பாலாற்றில் கலக்கப்படும் ரசாயனக் கழிவுகளால் அப்பகுதியின் நிலத்தடி நீர் முற்றாக மாசடைந்து மக்களின் குடிநீருக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளதோடு, பாலாற்று நீரை அருந்தும் கால்நடைகளும் உயிரிழக்கும் துயரங்கள் நேர்வது பெரும் வேதனையைத் தருகிறது. அளவுக்கதிகமான கழிவுநீர் கலப்பால் வேளாண்மை செய்யமுடியாத அளவிற்கு நிலம் மாசுப்பட்டு, மலட்டுத்தன்மை அடைந்துள்ளதால், அப்பகுதி விவசாயிகள் வேளாண்மையினை முழுவதுமாகக் கைவிட்டு, மாற்றுவேலைக்குச் செல்ல வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நள்ளிரவு நேரங்களில் தொழிற்சாலைகளிடமிருந்து பெறப்படும் கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் தொழிற்சாலைகளுக்குத் தராமல் நேரடியாக ஆற்றிற்குச் செல்லும் ஓடையில் கழிவு நீராகவே கலப்பதால் பாலாறு முற்றுமுழுதாகத் தன்னியல்பையும், உயிரோட்டத்தையும் இழந்து, நதியே நஞ்சாக மாறி நிற்கும் நிலை பெருங்கவலையைத் தருகிறது. ஆகவே, இச்சிக்கலில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி, தொழிற்சாலைக்கழிவுகளைப் பாலாற்றில் கலக்கும் தனியார் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நிரந்தரமாகத் தடைவிதிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஆக-202118:31:40 IST Report Abuse
ராஜா 10.2 மில்லியன் டாலர் செலவில் கூவத்தை சுத்தப்படுத்தியாச்சு, சீக்கிரத்தில் மண்ணெல்லாம் அள்ளி பலாற்றையும் சுத்தப்படுத்தி விடுவார்கள். கடுமையான சட்டம் போட்டு ஆறுகளில் கழிவுகள் கலப்பதை தடுக்க அரசுக்கும், நீதிமன்றங்களுக்கும் நேரம் இல்லை போல.
Rate this:
Cancel
zem - bengaluru,இந்தியா
27-ஆக-202112:31:58 IST Report Abuse
zem நதி மட்டுமா? காற்று?
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
27-ஆக-202111:42:47 IST Report Abuse
vpurushothaman தமிழகத்தில் பல இடங்களில் இவ்வாறு நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. கலப்பவர்களே " கரை வேட்டிக்" காரர் அல்லது அவர்களது பினாமி. காசியிலே - கங்கையிலே சுத்தம் செய்தார்களாமே - இங்கேயும் கொஞ்சம் பாருங்க சார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X