கோவை அருகே 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவை அருகே 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

Added : ஆக 26, 2021
Share
தொண்டாமுத்தூர்: நேபாளத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 24. இவருக்கு, திருமணமாகி, தன்கலா, 22 என்ற மனைவியும், அலிசா, 3 என்ற மகளும், ருத்ரா, 1 என்ற மகனும் உள்ளனர். ராஜ்குமார், கடந்த 8 மாதங்களாக, கோவை மாவட்டம், குப்பனூரில் உள்ள தனியார் தோட்டத்தில் தங்கி, மாட்டு பண்ணையை கவனித்து வந்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன், மனைவி தன்கலா மற்றும் இரண்டு குழந்தைகளும், குப்பன் ஊருக்கு வந்துள்ளனர்.
கோவை அருகே 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

தொண்டாமுத்தூர்: நேபாளத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 24. இவருக்கு, திருமணமாகி, தன்கலா, 22 என்ற மனைவியும், அலிசா, 3 என்ற மகளும், ருத்ரா, 1 என்ற மகனும் உள்ளனர். ராஜ்குமார், கடந்த 8 மாதங்களாக, கோவை மாவட்டம், குப்பனூரில் உள்ள தனியார் தோட்டத்தில் தங்கி, மாட்டு பண்ணையை கவனித்து வந்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன், மனைவி தன்கலா மற்றும் இரண்டு குழந்தைகளும், குப்பன் ஊருக்கு வந்துள்ளனர். தன் கலாவும் ராஜ்குமாருடன் இணைந்து மாட்டு பண்ணையில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல, பணிக்குச் செல்ல தன்கலாவை ராஜ்குமார் அழைத்துள்ளார். அப்போது, தன்கலா, தனக்கு தலைவலிப்பதாக கூறியுள்ளார். அதற்கு, ராஜ்குமார் தன்கலாவை சத்தம் போட்டு விட்டு, சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, வேலைக்கு வரவேண்டும் என கூறிச் சென்றுள்ளார். பகல்,12:00 மணிக்கு, ராஜ்குமார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் கதவு அடைக்கப்பட்டு இருந்தது.
வீட்டின் பின்புறமுள்ள ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது, தன்கலா மற்றும் இரண்டு குழந்தைகளும் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பேரூர் டி.எஸ்.பி., (பொ) சேகர், பேரூர் இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு ஆகியோர் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை செய்தனர். மூவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இரு குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X