அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.ம.மு.க., பிரமுகர்கள் தி.மு.க.,வில் ஐக்கியம்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட அ.ம.மு.க., பிரமுகர்கள் அமைச்சர் காந்தி முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.ராணிப்பேட்டை மாவட்ட அ.ம.மு.க., அம்மா பேரவை செயலாளர் சேஷாத்திரி தலைமையில் வர்த்தக அணி துணை செயலாளர் முரளி, தகவல் தொழில் நுட்ப அணி துணை செயலாளர் திருமலை, சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் சமத், ஊராட்சி செயலாளர் இளங்கோ ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி கைத்தறித்துறை
அ.ம.மு.க., பிரமுகர்கள் தி.மு.க.,வில் ஐக்கியம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட அ.ம.மு.க., பிரமுகர்கள் அமைச்சர் காந்தி முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட அ.ம.மு.க., அம்மா பேரவை செயலாளர் சேஷாத்திரி தலைமையில் வர்த்தக அணி துணை செயலாளர் முரளி, தகவல் தொழில் நுட்ப அணி துணை செயலாளர் திருமலை, சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் சமத், ஊராட்சி செயலாளர் இளங்கோ ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி கைத்தறித்துறை அமைச்சர் காந்தி முன்னிலையில் ராணிப்பேட்டையில் நடந்த விழாவில் அக்கட்சியில் சேர்ந்தனர். ஆற்காடு தி.மு.க., எம்.எல்.ஏ., ஈஸ்வரப்பன் உடனிருந்தார்.
தி.மு.க.,வில் இணைந்த சேஷாத்திரி கூறியதாவது: அ.ம.மு.க.,வின் செயல்பாடுகள் சரியாக இல்லை. பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு தினகரன் கட்சி நடத்தி வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலில் அ.ம.மு.க.,வுக்காக வேலை செய்து லட்சக்கணக்கில் பணத்தை இழந்து விட்டோம். இதுகுறித்து தெரிவித்தும் கட்சி மேலிடம் கருணை காட்டவில்லை. இதனால் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்தோம். விரைவில் அ.ம.மு.க.,வில் இருந்து மேலும் பலர் தி.மு.க.,வில் இணைய உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X