சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சரக்கு ரயில் மோதி தொழிலாளி பலி

Added : ஆக 26, 2021
Share
Advertisement
ஆரணி: ஆரணி அருகே கூலித்தொழிலாளி மீது சரக்கு ரயில் மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே களம்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜா(55) என்பவர் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். ராஜாவுக்கு சாவித்திரி என்ற மனைவியும் இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.கடந்த 10 நாட்களுக்கு முன் மனநலம் பாதிக்கபட்ட காரணத்தால்

ஆரணி: ஆரணி அருகே கூலித்தொழிலாளி மீது சரக்கு ரயில் மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே களம்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜா(55) என்பவர் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். ராஜாவுக்கு சாவித்திரி என்ற மனைவியும் இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன் மனநலம் பாதிக்கபட்ட காரணத்தால் வீட்டிலிருந்து சென்றுவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவரது மகன், மகள்கள், அவரது மனைவி ஆகியோர் 10 நாட்களாக ராஜாவை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை களம்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் விழுப்புரத்தில் இருந்து காட்பாடி நோக்கிச் சென்ற சரக்கு ரயில் மோதியதில் ராஜா தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி ரயில்வே போலீசார், ராஜாவின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X