பொது செய்தி

இந்தியா

சீனாவிடமிருந்து இறக்குமதியை குறையுங்கள்: நிடி ஆயோக் சி.இ.ஓ.,

Updated : ஆக 26, 2021 | Added : ஆக 26, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
புது டில்லி: சீனாவிடமிருந்து மின்சார வாகன உதிரிபாகங்கள் மற்றும் பிற வாகன உதிரிபாகங்கள் இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை மேற்கொள்ளுமாறு ஆட்டோ மொபைல் துறையினரிடம் நிடி ஆயோக் சி.இ.ஓ., அமிதாப் காந்த் வலியுறுத்தினார். இந்திய வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 61-ம் ஆண்டு கூட்டத்தில் நிடி ஆயோக் சி.இ.ஓ., அமிதாப் காந்த், பேசியதாவது: வாகன

புது டில்லி: சீனாவிடமிருந்து மின்சார வாகன உதிரிபாகங்கள் மற்றும் பிற வாகன உதிரிபாகங்கள் இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை மேற்கொள்ளுமாறு ஆட்டோ மொபைல் துறையினரிடம் நிடி ஆயோக் சி.இ.ஓ., அமிதாப் காந்த் வலியுறுத்தினார்.



latest tamil news



இந்திய வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 61-ம் ஆண்டு கூட்டத்தில் நிடி ஆயோக் சி.இ.ஓ., அமிதாப் காந்த், பேசியதாவது: வாகன உதிரிபாகங்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து, இறக்குமதியை நம்பியிருப்பதை குறைக்க வேண்டும். குறிப்பாக சீனாவை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும். இதன் மூலம் விநியோக சங்கிலியின் ஆபத்தை குறைக்கலாம். மின்னணு எரிபொருள் இன்ஜெக் ஷன் அமைப்பு, நச்சுப்புகையை வடிக்கட்டும் சாதனங்கள் சீனாவிலிருந்து பெறப்படுகின்றன. இது போன்ற சாதனங்கள் அடுத்த சில காலாண்டுகளுக்குள் உள்ளூரில் தயாரிக்கப்பட வேண்டும். போர்ஜிடு மற்றும் இயந்திர உதிரிபாகங்களின் உள்நாட்டு தயாரிப்பும் முக்கியமானது.

மின்னணு மற்றும் மின்சார பாகங்கள், குறைக்கடத்தி சம்பந்தப்பட்ட பாகங்கள், டூலிங் மற்றும் மோல்டுகள், மின்சார மோட்டார்களில் பயன்படுத்தப்படும் காந்தங்கள் போன்ற பிற மூலப்பொருட்களின் இறக்குமதிகள் குறைக்கப்படுவது மட்டுமல்லாமல் நீக்கப்பட வேண்டும். மேக் இன் இந்தியாவின் அணுகுமுறை மிகவும் தெளிவானது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்தி, இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைப்பதாகும். அதன் மூலம் விநியோக சங்கிலியின் ஆபத்தை இல்லாமல் செய்யலாம்.


latest tamil news



ஆட்டோமொபைல் துறை மின்சார வாகனங்களுக்கு மாறுவது தவிர்க்க முடியாத ஒன்று. மின்சார வாகனங்களின் உலக தலைமையாக இந்தியாவை உருவாக்குவதற்கு ஆட்டோமொபைல் துறை மாற்றத்தை ஏற்படுத்தி அதை செயல்படுத்த வேண்டும். அதற்காக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். சார்ஜிங் கட்டமைப்பு, மோட்டார்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக அது இருக்க வேண்டும். இவ்வாறு பேசினார்

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஆக-202111:19:59 IST Report Abuse
அப்புசாமி பேஷ்..பேஷ்.. இவா காமெடி எப்பிடி இருக்குன்னா டாஸ்மாக்கை மூடாமல், பாட்டில் மேலே குடிக்காதீங்க... குடி குடியைக் கெடுக்கும்னு லேபில் ஒட்டின மாதிரி இருக்கு. சீனா இறக்குமதியை நிறுத்த மாட்டா இவா... இந்திய சாமானை வாங்கச் சொல்லுவா...
Rate this:
Cancel
27-ஆக-202111:19:57 IST Report Abuse
அப்புசாமி பேஷ்..பேஷ்.. இவா காமெடி எப்பிடி இருக்குன்னா டாஸ்மாக்கை மூடாமல், பாட்டில் மேலே குடிக்காதீங்க... குடி குடியைக் கெடுக்கும்னு லேபில் ஒட்டின மாதிரி இருக்கு. சீனா இறக்குமதியை நிறுத்த மாட்டா இவா... இந்திய சாமானை வாங்கச் சொல்லுவா...
Rate this:
Cancel
27-ஆக-202111:02:45 IST Report Abuse
ஆரூர் ரங் வாகன உற்பத்தியில் சமீப புதிய தடங்கல் மின்னணு CHIP பற்றாக்குறைதான்.😶 ஆனாலும் இங்கு தனியார் கூட அதற்கான வசதிகளை உருவாக்கவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X