பொது செய்தி

தமிழ்நாடு

3 மாதங்களுக்கு பின் புதிய ஏரி அமைக்கும் பணிகள் துவக்கம்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
ஆத்தூர்: சொக்கனுாரில், 26.29 கோடி ரூபாயில், பொன்னாளியம்மன் புதிய ஏரி அமைக்கும் பணிகள் மூன்று மாதங்களுக்கு பின் துவங்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, வீரகனுார், சொக்கனுார் அக்ரஹாரத்தில், பொன்னி ஓடை குறுக்கே, 102 ஏக்கர் பரப்பளவில், புது ஏரி அமைக்க, மக்கள் பல ஆண்டாக விடுத்த கோரிக்கையால், 2019ல், அப்போதைய முதல்வர் பழனிசாமி, 26.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். இந்த ஏரி
 3 மாதங்களுக்கு பின் புதிய ஏரி அமைக்கும் பணிகள் துவக்கம்

ஆத்தூர்: சொக்கனுாரில், 26.29 கோடி ரூபாயில், பொன்னாளியம்மன் புதிய ஏரி அமைக்கும் பணிகள் மூன்று மாதங்களுக்கு பின் துவங்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, வீரகனுார், சொக்கனுார் அக்ரஹாரத்தில், பொன்னி ஓடை குறுக்கே, 102 ஏக்கர் பரப்பளவில், புது ஏரி அமைக்க, மக்கள் பல ஆண்டாக விடுத்த கோரிக்கையால், 2019ல், அப்போதைய முதல்வர் பழனிசாமி, 26.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார்.
இந்த ஏரி அமைக்க, 85 பேர் தங்களது நிலங்களை வழங்க முன்வந்தனர். அதில், ஆறு பேர் தங்களது முழு நிலங்களையும் கொடுத்தனர். கடந்த, 2020, டி., 29ல், பொன்னாளியம்மன் ஏரி அமைக்க பூமி பூஜை நடந்தது.
ஏரி அமைவிடம் முழுவதும் ஆழப்படுத்தும் பணிகள் நடந்தது. அதன்பின், 'கொரோனா' பரவல் காரணமாக, பணிகள் அவ்வப்போது நிறுத்தப்பட்டது. கடந்த, மூன்று மாதமாக, பணிகள் எதுவும் நடைபெறவில்லை. கடந்த, 17 முதல், ஏரி அமைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூறுகையில், 'வீரகனுார், சொக்கனுாரில், பொன்னாளியம்மன் ஏரி, 18 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கும் வகையில், 102 ஏக்கரில் அமைக்கப்படுகிறது. இதன்மூலம், 446 ஏக்கர் பாசன வசதி பெறும்.
எட்டு மீட்டர் உயரத்தில் கரையும், 1,360 மீட்டர் துாரம் கரை அமைக்கப்படுகிறது. இதற்காக, நான்கு பொக்லைன், எட்டு டிப்பர் லாரி மற்றும் 25 தொழிலாளர்களுடன் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கின்போது, குவாரிகள் மூடப்பட்டிருந்தது. கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்திருந்ததால் பொருட்கள் வாங்க முடியவில்லை. தற்போது, விலை சீரானதால் ஏரி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தண்ணீர் தேங்கும் வகையில் ஆழப்படுத்தும் பணிகள் உள்பட ஐந்து சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது' இவ்வாறு கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X