காபூல் விமான நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 72 பேர் பலி

Updated : ஆக 27, 2021 | Added : ஆக 26, 2021 | கருத்துகள் (45)
Share
Advertisement
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் வாயிலில், இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 12 அமெரிக்க கடற்படை வீரர்கள் உட்பட, 72 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. தெற்காசிய நாடான காபூலை, தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றிய பின், அந்நாட்டில் இருந்து வெளியேறுவதற்காக தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும்
Kabul airport attack, Taliban, IS, Kabul airport bombings, Afghanistan

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் வாயிலில், இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 12 அமெரிக்க கடற்படை வீரர்கள் உட்பட, 72 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெற்காசிய நாடான காபூலை, தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றிய பின், அந்நாட்டில் இருந்து வெளியேறுவதற்காக தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் குவிந்த வண்ணம் உள்ளனர்.


latest tamil news



காபூல் விமான நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக, ஆப்கனில் உள்ள அமெரிக்க துாதரகம் எச்சரிக்கை விடுத்தது. காபூல் விமான நிலையத்தின் மூன்று வாயில்களில் இருந்தும் அமெரிக்கர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி எச்சரித்தது.

பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களும் காபூல் விமான நிலையம் தாக்கப்பட வாயப்புள்ளதாக எச்சரித்து வந்தனர். இந்நிலையில் காபூல் விமான நிலையத்தில் 4 இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

விமான நிலையத்திற்கு வெளியே அபே கேட் அருகே முதல் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில், விமானம் ஏற அமெரிக்கர்கள் காத்திருக்கும் பகுதியான பரோன் ஹோட்டல் கேட் அருகே அடுத்த குண்டு வெடித்தது. இதையடுத்து அடுத்த சில மணி நேரத்தில், விமான நிலையத்தின் அருகில் மேலும் இரு குண்டுகள் வெடித்தன.

இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில், குழந்தைகள் உட்பட 72 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளன. இதில் 12 அமெரிக்க கடற்படை வீரர்கள் பலியானதாக அமெரிக்க அதிபர் பைடன் உறுதிப்படுத்தி உள்ளார். 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதால் உயிர் பலி மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் கோரோசான் பிரிவு (ஐ.எஸ்.கே.பி.,) பொறுப்பேற்றுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suman - madurai,இந்தியா
27-ஆக-202116:47:54 IST Report Abuse
Suman சொறி மூஞ்சி தாலிபான் இந்த சம்பவத்துக்கு என்ன பதில் சொல்றான்?
Rate this:
Cancel
Krish - Bengalooru,இந்தியா
27-ஆக-202115:37:11 IST Report Abuse
Krish ஜாவேத் அக்தர், ஜார்ஜ் பாதிரியார், சாதனா ஆஸ்மி, கமல ஹாசன், மற்றும் பல பிரபலங்கள் 'இந்தியாவின் பொறுமையற்ற நாடாக சொல்லி' ஊடகங்கள்முன் காட்சி அளித்தனர். இப்போது ஆப்கானில் ஷரியத் உள்ளது, ட்ரிபிள் தலாக் உள்ளது, உருவ வழிபாடு கிடையாது, அமைதி மார்க்கமான இஸ்லாமை தீவிரமாக கடை பிடிக்கின்றனர். இந்த பிரபலங்கள் ஆபிகான் போகலாமே .
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
27-ஆக-202114:50:00 IST Report Abuse
Vena Suna உலகத்துக்கே கெடுதல் இவர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X