சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

யாகத்தால் பலன் கிடைக்குமா?

Added : ஆக 26, 2021
Share
Advertisement
யாகத்தால் பலன் கிடைக்குமா?'பதவியும், பணமும் கூடக் கூட, அரசியல்வாதிகளுக்கு பயமும் அதிகரித்து விட்டது' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜியை கிண்டலடிக்கின்றனர் எதிர்க்கட்சியினர். மேற்கு வங்கத்தில் சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டசபை தேர்தலில், யாரும் எதிர்பார்க்காத வகையில் திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று, மீண்டும்


அக்கம் பக்கம்


யாகத்தால் பலன் கிடைக்குமா?



'பதவியும், பணமும் கூடக் கூட, அரசியல்வாதிகளுக்கு பயமும் அதிகரித்து விட்டது' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜியை கிண்டலடிக்கின்றனர் எதிர்க்கட்சியினர். மேற்கு வங்கத்தில் சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டசபை தேர்தலில், யாரும் எதிர்பார்க்காத வகையில் திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. மம்தாவே இந்த வெற்றியை எதிர்பார்க்கவில்லை; இன்ப அதிர்ச்சியில் உறைந்தார். ஆனாலும் நந்திகிராம் தொகுதியில் அவர் தோல்வி அடைந்தார். அடுத்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., மற்றும் காங்கிரசுக்கு மாற்றாக தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்கும் பணிகளில் சமீப காலமாக தீவிரமாக ஈடுபட்டுள்ளார் மம்தா பானர்ஜி. இதற்காக டில்லி சென்று, அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே, மேற்கு வங்கத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,வாக வேண்டிய நெருக்கடி மம்தாவுக்கு ஈடுபட்டுள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ., முழு பலத்தையும் பயன்படுத்தி, மீண்டும் தன்னை தோற்கடித்து விடுமோ என்ற பயம், மம்தாவுக்கு ஏற்பட்டுள்ளது. கோல்கட்டாவில் உள்ள தன் வீட்டுக்கு வேத விற்பன்னர்களை அழைத்து வந்து, கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக சிறப்பு யாகங்களை நடத்தி வருகிறார். இதனால் மம்தாவின் வீடு தினமும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. 'மக்களை நம்பாமல், யாகத்தை நம்புகிறார் மம்தா; பலன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்' என்கின்றனர், பா.ஜ.,வினர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X