டவுட் தனபாலு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஆக 26, 2021 | கருத்துகள் (2)
Share
பத்திரிகை செய்தி: 'கருணாநிதி எனும் தீயசக்தியை அழிக்கவே, அ.தி.மு.க., உருவாக்கப்பட்டது' என்று எம்.ஜி.ஆர்., முழங்கினார்; ஜெயலலிதாவும் அப்படியே இருந்தார். ஆனால், அ.தி.மு.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கருணாநிதிக்கு மணி மண்டபம் கட்டுவதை வரவேற்றுள்ளார். இது தவறு' என, அ.தி.மு.க.,வினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.'டவுட்' தனபாலு: தி.மு.க., ஆட்சி அமைந்ததில் இருந்தே,

'டவுட்' தனபாலு

பத்திரிகை செய்தி: 'கருணாநிதி எனும் தீயசக்தியை அழிக்கவே, அ.தி.மு.க., உருவாக்கப்பட்டது' என்று எம்.ஜி.ஆர்., முழங்கினார்; ஜெயலலிதாவும் அப்படியே இருந்தார். ஆனால், அ.தி.மு.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கருணாநிதிக்கு மணி மண்டபம் கட்டுவதை வரவேற்றுள்ளார். இது தவறு' என, அ.தி.மு.க.,வினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

'டவுட்' தனபாலு: தி.மு.க., ஆட்சி அமைந்ததில் இருந்தே, ஓ.பன்னீர்செல்வத்தின் போக்கு, 'டவுட்'மயமாகவே உள்ளது. தி.மு.க.,வுக்கு பழனிசாமி, 'செம பைட்' கொடுக்கையில், இவர் ரொம்ப, 'மைல்ட்' ஆக உள்ளார் என்பது, அ.தி.மு.க.,வினரின், 'மைண்ட் வாய்ஸ்' ஆக உள்ளது. எனவே, இனிமேலும் ஓ.பன்னீர்செல்வம் இது போன்ற டவுட்டுகளுக்கு இடமளிக்க மாட்டார் என நம்பலாம்!

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் ப.குமார்:
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு அகவிலைப்படியை வழங்கும் திட்டத்தை ஒன்பது மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது. அதை நியாயப்படுத்தி தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் பேசியுள்ளது, அரசு ஊழியர்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது. இது போன்று பேச, முதல்வர் தடை விதிக்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: கருணாநிதி முதல்வர் பதவியில் இருந்திருந்தால், தியாகராஜன் இப்படி பேசியிருப்பாரோ என்ற, 'டவுட்' அரசு ஊழியர்களுக்கு வருகிறது. ஏனெனில், கருணாநிதி தன் பதவி காலத்தில், அரசு ஊழியர்களை 'கவனமாக' பார்த்துக் கொண்டார். ஜெயலலிதா அப்படியில்லை என்பதை புரிந்து கொண்ட அவர், அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கினார் என்பதை, அரசு ஊழியர்கள் மறந்திருக்க மாட்டார்கள்!


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி:
வரும் 2025ம் ஆண்டிற்குள், நாட்டின் சொத்துகளை விற்பனை செய்து, 6 லட்சம் கோடி ரூபாயை திரட்ட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது; அது கூடாது. அந்த சொத்துக்கள், பா.ஜ.,வின் சொத்துகள் அல்ல; இந்த நாட்டின் சொத்துகள்!

'டவுட்' தனபாலு: நீங்கள் மட்டும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, துர்காப்பூர் புராஜக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தை விற்று, கடன்களை அடைக்க முன்வந்துள்ளீர்களே; அது என்ன உங்கள் கட்சியான திரிணமுல் காங்கிரஸ் சொத்தா... உங்களுக்கு வந்தால் ரத்தம்; மத்திய அரசுக்கு என்றால் தக்காளி சட்னியோ என்ற, 'டவுட்' மக்களுக்கு வருகிறது!

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X