கைத்தறிக்கு முக்கியத்துவம்நெசவாளர்கள் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கைத்தறிக்கு முக்கியத்துவம்நெசவாளர்கள் வலியுறுத்தல்

Added : ஆக 26, 2021
Share
பெங்களூரு:கைத்தறி நெசவாளர்களின் தொழில் மேம்பாட்டை உறுதி செய்ய, பள்ளி சீருடைகள் நெசவுக்கான டெண்டரை, மாநில அரசு வழங்க வேண்டுமென, நெசவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.கர்நாடக கைத்தறி மேம்பாட்டு கழகத்தினருடன், கைத்தறி நெசவு மேம்பாடு குறித்து மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை சிறப்பு கூட்டம் நடத்தினார்.அதில், பல்வேறு புதிய நடைமுறைகளை செயல்படுத்த மேம்பாட்டு கழகத்தினருக்கு

பெங்களூரு:கைத்தறி நெசவாளர்களின் தொழில் மேம்பாட்டை உறுதி செய்ய, பள்ளி சீருடைகள் நெசவுக்கான டெண்டரை, மாநில அரசு வழங்க வேண்டுமென, நெசவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கர்நாடக கைத்தறி மேம்பாட்டு கழகத்தினருடன், கைத்தறி நெசவு மேம்பாடு குறித்து மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை சிறப்பு கூட்டம் நடத்தினார்.அதில், பல்வேறு புதிய நடைமுறைகளை செயல்படுத்த மேம்பாட்டு கழகத்தினருக்கு முதல்வர் அறிவுறுத்தினார். கொரோனா பாதிப்பால், ஆடை விற்பனை, நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதில் கைத்தறி நெசவாளர்களும் பொருளாதார நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட இழப்பிலிருந்து மீண்டு வருவதற்கு கைத்தறி மேம்பாட்டு கழகத்தினர், முதல்வரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தனர்.கூட்டத்தில் அவர்கள் கூறியதாவது:பள்ளி மாணவர்களுக்கான சீருடை வடிவமைப்பு பணிகள் கைத்தறி மேம்பாட்டு கழகத்தின் கீழ் உள்ள நெசவாளர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவியாக இருக்கும். இதன் மூலம் 10 கோடி ரூபாய் லாபம் வருவதற்கு வாய்ப்புள்ளது.

மேலும், சீருடை வினியோகம் செய்வதில் பல நெசவாளர்களுக்கு பணிபாதுகாப்புக்கும் உறுதியாக கிடைக்கும். அனைத்து துறையினரும் அந்தந்த துறைக்கு தேவைப்படும் ஆடைகளை, 25 சதவீதம் கைத்தறி நெசவாளர்களிடம் பெற வேண்டும். கைத்தறி மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நெசவாளர்கள் தங்களின் விளைப்பொருட்களை கடைகள் அமைத்து காட்சிப்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X