சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

மலைக்க வைக்கும் 'மாஜி'யின் முறைகேடுகள்!

Added : ஆக 26, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மலைக்க வைக்கும் 'மாஜி'யின் முறைகேடுகள்!''எழுதிய விளம்பரத்தை அழிச்சிட்டாங்க பா...'' என, ஏலக்காய் டீயை பருகியபடியே, அரட்டை கச்சேரியை ஆரம்பித்தார் அன்வர்பாய்.''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''சென்னை தேனாம்பேட்டையில, காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமான காமராஜர் அரங்கம் இருக்கே... இந்த கட்டடத்தின் காம்பவுண்ட் சுவர்ல, தமிழக பா.ஜ., விளம்பரத்தை

 டீ கடை பெஞ்ச்


மலைக்க வைக்கும் 'மாஜி'யின் முறைகேடுகள்!



''எழுதிய விளம்பரத்தை அழிச்சிட்டாங்க பா...'' என, ஏலக்காய் டீயை பருகியபடியே, அரட்டை கச்சேரியை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''சென்னை தேனாம்பேட்டையில, காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமான காமராஜர் அரங்கம் இருக்கே... இந்த கட்டடத்தின் காம்பவுண்ட் சுவர்ல, தமிழக பா.ஜ., விளம்பரத்தை சிலர் எழுதிட்டாங்க பா...

''காங்கிரஸ் சுவர்ல பா.ஜ., விளம்பரமான்னு கொதிச்சு போன, மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் ஓடோடி வந்து, அந்த விளம்பரத்தை சுண்ணாம்பு பூசி அழிச்சிட்டாங்க...

''சுவரை சும்மாவே விட்டா, மறுபடியும் பா.ஜ.,காரங்க விளம்பரம் எழுதிடுவாங்கன்னு பயந்தவங்க, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பிறந்த நாளை ஒட்டி, அவருக்கு வாழ்த்து விளம்பரத்தை எழுதிட்டு போயிட்டாங்க பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.

''கை நீட்டுனவங்க எல்லாம் கவலையில இருக்காவ வே...'' என, வேறு விஷயத்திற்கு மாறிய அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டிக்கு உட்பட்ட பகுதிகள்ல, அதிக அளவுல மண், மணல், கற்களை பலர் கடத்திட்டு போறாவ... இதை பிடிக்கிற அதிகாரிகள், அபராதம் விதிக்காம, 'அமவுன்டை' வாங்கிட்டு விட்டுடுதாவ வே...

''இது சம்பந்தமா, சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குனர் அலுவலகத்துக்கு சிலர் புகார்கள் அனுப்பிஇருக்காவ... இதனால, இது பத்தி விசாரிச்சு அறிக்கை தரும்படி, கலெக்டர் திவ்யதர்ஷினி, அரூர் ஆர்.டி.ஓ.,வுக்கு உத்தரவு போட்டுஇருக்காங்க வே...

''ஆர்.டி.ஓ., முத்தையனும் கடத்துார், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகள்ல இருக்கிற வி.ஏ.ஓ.,க்களிடம் தனித்தனியா விசாரணை நடத்திட்டு இருக்காரு... இதனால, சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரியும், வி.ஏ.ஓ.,க்களும் கலக்கத்துல இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''ஆத்துல, பார்வதி சவுக்கியம் தான ஓய்...'' என, மொபைல் போனில் பேசியபடியே வந்த குப்பண்ணா, ''தோண்ட தோண்ட வந்துண்டே இருக்கு போங்கோ...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார்.

''என்ன சமாச்சாரம் வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் பலர், வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்துட்டதா, லஞ்ச ஒழிப்பு துறைக்கு நிறைய புகார்கள் வந்திருக்கு... இதுல, வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த, 'மாஜி' 410 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்திருக்கறதா புகார் வந்திருக்கு ஓய்...

''இது சம்பந்தமா விசாரணை நடந்தது... 'மாஜி'யுடன் இருந்த ஒருத்தர், அரசு வழிகாட்டி மதிப்பு, 50 லட்சம் ரூபாய் உள்ள இடத்தை, வெறும் 4 லட்சம் ரூபாய்ன்னு கணக்கு காட்டி, பதிவு செய்தது தெரிஞ்சது... இதுக்கு, 'மாஜி' தன் அதிகாரத்தை தவறா பயன்படுத்தி ஒத்தாசையா இருந்திருக்கார் ஓய்...

''இது தவிர, ஹவாலா மோசடியும் நிறைய நடந்திருக்காம்... இது சம்பந்தமா, லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆதாரங்களை திரட்டிண்டு இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''வீரமணி வர்றாரு நாயரே... பாக்கி தரணும்னு சொன்னீரே...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
27-ஆக-202115:24:42 IST Report Abuse
D.Ambujavalli எல்லா 'மாஜி' களும் கொஞ்ச காலம் வரிசை கட்டி செய்தியாவார்கள் பார்க்க,வேண்டியவரை பார்த்து, 'செய்முறை' செய்யவேண்டும் என்ற சின்ன வழிகூடத் தெரியாமலா இத்தனை ஊழல் செய்வார்கள் ? மக்களுக்கே தெரியும் எல்லாக் கேஸ்களுக்கும் ஆயுசு சில நாட்கள் தான் என்று
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
27-ஆக-202110:42:50 IST Report Abuse
duruvasar சொகுசு மலை பங்களா காரரும் கூட இருந்ததால் விழயம் எல்லாம் 50/50 வாய்ப்பை பயன்படுத்தி வீரமா துரை மாதிரி வெளியே வந்துடுவார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X