எடியூரப்பா சுற்றுப்பயணத்தை தடுக்க எதிரி கோஷ்டி உள்குத்து

Added : ஆக 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெங்களூரு:கர்நாடகாவில், பா.ஜ.,வை மேலும் பலப்படுத்தி, ஆட்சியில் அமர்த்தும் நோக்கில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயணத்தை தடுக்க, கட்சியிலேயே சிலர் உள்குத்து முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.முதல்வர் பதவியை ராஜினாமா செய்த எடியூரப்பா, குடும்பத்தினருடன் வெளிநாடு சுற்றுலா சென்று, சில நாட்களுக்கு முன், பெங்களூரு திரும்பினார்.அடுத்த சட்டசபை

பெங்களூரு:கர்நாடகாவில், பா.ஜ.,வை மேலும் பலப்படுத்தி, ஆட்சியில் அமர்த்தும் நோக்கில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயணத்தை தடுக்க, கட்சியிலேயே சிலர் உள்குத்து முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த எடியூரப்பா, குடும்பத்தினருடன் வெளிநாடு சுற்றுலா சென்று, சில நாட்களுக்கு முன், பெங்களூரு திரும்பினார்.அடுத்த சட்டசபை தேர்தலுக்கு, கட்சியை தயாராக்கும் நோக்கில், மாநில சுற்றுப்பயணம் செய்ய, எடியூரப்பா திட்டமிட்டு உள்ளார். சுற்றுப்பயணத்துக்காகவே புதிதாக காரும் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் எடியூரப்பாவின் சுற்றுப்பயணத்தை தடுக்க, அவரது எதிரி கோஷ்டி, உள் குத்து வேலை செய்கிறது. எதிரி கோஷ்டியின் நிரந்தரமான புகார்களால், பா.ஜ., மேலிடம், அவரிடமிருந்து முதல்வர் பதவி ராஜினாமா கடிதம் பெற்றது.தற்போது இவரது சுற்றுப் பயணத்துக்கும், இடையூறு விளைவிக்க முயற்சிக்கின்றனர்.கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சியில் இருப்பதால், அரசைப்பற்றி மக்கள் அதிகம் எதிர்ப்பார்க்கின்றனர்.

கட்சியை பலப்படுத்த, சுற்றுப்பயணம் செய்வது தொடர்பாக, கட்சிக்குள் விவாதித்து முடிவு செய்ய வேண்டும். எடியூரப்பா மட்டும் தனியாக சுற்றுப்பயணம் செய்தால், மக்களுக்கு வேறு விதமான செய்தி செல்லும். ஒருவரே சுற்றுப்பயணம் செய்வது சரியல்ல. இது தேவையற்ற குழப்பங்களுக்கு காரணமாகும். சுற்றுப்பயண பட்டியல், கட்சி சார்பில் தயாராகும்படி பார்த்து கொள்ள வேண்டும்.எந்த தலைவர் எங்கு சுற்றுப்பயணம் செய்ய வேண்டும்; எங்கு கூட்டம் நடத்த வேண்டும்; எந்தெந்த தலைவரை சந்திக்க வேண்டும் என்பதை, கட்சியே முடிவு செய்ய வேண்டும்.

தனியாக சுற்றுப்பயணம் செய்ய வேண்டாமென எடியூரப்பாவுக்கு உத்தரவிட வேண்டும், என கட்சி மேலிடத்திடம் வலியுறுத்தி வருகின்றனர்.ஆனால் பா.ஜ., மேலிடத்துக்கு, எடியூரப்பாவின் சக்தி தெரிந்திருப்பதால், அவரது எதிர் கோஷ்டியினரின் நெருக்கடிக்கு பணிய வாய்ப்பில்லை என, கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
27-ஆக-202118:43:09 IST Report Abuse
Vena Suna 75 வயசுன்னு எடியூரப்பாக்கு ஓய்வு.இலை.கணேசனுக்கு 76 வயதில் ஆளுநர். மத்திய BJP சரி அல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X