ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியநில ஆய்வு அதிகாரிகள் கைது

Added : ஆக 26, 2021
Share
Advertisement
பெங்களூரு:சொத்து ஒன்றின் எல்லையை அடையாளம் காண்பிக்க, 70 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு, 20 லட்சம் ரூபாய் பெற்றுள்ள குற்றச்சாட்டில், நில ஆய்வியல் துறை உதவி இயக்குனர் உட்பட இருவரை ஏ.சி.பி.,யினர் கைது செய்துள்ளனர்.பெங்களூரு புறநகரின் நாகதாசனபுராவில் வசிக்கும் நபர் ஒருவர், குதுரகரே கிராமத்தில் உள்ள தன் நிலத்தின் எல்லையை ஆய்வு செய்து அடையாளம் காண்பிக்கும்படி, நில ஆய்வியல்

பெங்களூரு:சொத்து ஒன்றின் எல்லையை அடையாளம் காண்பிக்க, 70 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு, 20 லட்சம் ரூபாய் பெற்றுள்ள குற்றச்சாட்டில், நில ஆய்வியல் துறை உதவி இயக்குனர் உட்பட இருவரை ஏ.சி.பி.,யினர் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு புறநகரின் நாகதாசனபுராவில் வசிக்கும் நபர் ஒருவர், குதுரகரே கிராமத்தில் உள்ள தன் நிலத்தின் எல்லையை ஆய்வு செய்து அடையாளம் காண்பிக்கும்படி, நில ஆய்வியல் துறையில் விண்ணப்பம் தாக்கல் செய்திருந்தார்.நிலத்தை ஆய்வு செய்ய, நில ஆய்வியல் துறை உதவி இயக்குனர் ஆனந்த குமார், 70 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார். அரசு பணியை செய்ய இவ்வளவு பணம் லஞ்சமாக கொடுக்க வேண்டுமா என அந்த நபர் கேட்டு, பணம் தர மறுத்தார்.

பணத்தை தராவிட்டால், நீதிமன்றம் உத்தரவிட்டாலும், நிலத்தின் எல்லையை காண்பிக்க முடியாது என, நில ஆய்வியல் துறை அதிகாரிகள் கூறினர். இதனால் வேறு வழியின்றி பணம் கொடுக்க அந்த நபர் சம்மதித்தார். முதற்கட்டமாக 20 லட்சம் ரூபாயை, அந்த அதிகாரிகளுக்கு வழங்கினார்.அவர்களை போலீசில் சிக்க வைக்க வேண்டும் என நினைத்து, லஞ்சம் அளித்தது குறித்து அந்த நில உரிமையாளர் ஏ.சி.பி., எனும் ஊழல் ஒழிப்பு படையினரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து நில ஆய்வியல் துறை உதவி இயக்குனர் ஆனந்தகுமார், அலுவலக ஒப்பந்த ஊழியர் ரமேஷ், நில ஆய்வியல் துறை துணை இயக்குனர் குசுமலதா, நில மதிப்பிட்டாளர் சீனிவாஸ் ஆகியோரின் வீடுகளில், நேற்று முன் தினம் இரவு, ஏ.சி.பி., அதிகாரிகள் சோதனையிட்டனர். சோதனையில் 25.70 லட்சம் ரொக்கம், 70 லட்சம் ரூபாய்க்கான மூன்று காசோலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனந்தகுமார், ரமேஷ் கைது செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X