பொது செய்தி

இந்தியா

திரைத்துறைக்கு இலவச பயிற்சி

Added : ஆக 26, 2021
Share
Advertisement
திரைத்துறைக்கு இலவச பயிற்சிபொங்கு தமிழ் இயக்கம் சார்பாக திரைத்துறையில், நடிப்பு, கதை, திரைக்கதை எழுதுதல், இயக்கம், படத்தொகுப்பு, ஒளிப்பதிவில் ஈடுபாடுள்ளவர்களுக்கு இலவச பயிற்சி முகாம் நடக்கவுள்ளது. பத்தாம் வகுப்பு முடித்த, 21 வயதுக்-குள் கட்டாயம் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். கன்னடம் ஓரளவுக்கு பேச தெரிந்திருக்க வேண்டும். ஏழை மாணவ, மாணவியருக்கு இலவச உணவு,

திரைத்துறைக்கு இலவச பயிற்சி

பொங்கு தமிழ் இயக்கம் சார்பாக திரைத்துறையில், நடிப்பு, கதை, திரைக்கதை எழுதுதல், இயக்கம், படத்தொகுப்பு, ஒளிப்பதிவில் ஈடுபாடுள்ளவர்களுக்கு இலவச பயிற்சி முகாம் நடக்கவுள்ளது. பத்தாம் வகுப்பு முடித்த, 21 வயதுக்-குள் கட்டாயம் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். கன்னடம் ஓரளவுக்கு பேச தெரிந்திருக்க வேண்டும். ஏழை மாணவ, மாணவியருக்கு இலவச உணவு, தங்கும் இடம் அளிக்கப்படும். பயிற்சி பெற்றவர்களுக்கு பொங்கு தமிழ் இயக்கம் தயாரிக்கும் திரைப்படத்தில் வாய்ப்பு அளிக்கப்படும். தொடர்புக்கு: 95141 49114.

சஞ்சாரி விஜய் படங்கள் வெளியீடு

தேசிய விருது பெற்ற நடிகர் சஞ்சாரி விஜய், விபத்தில் இறப்பதற்கு முன் நடித்திருந்த திரைப்படங்கள், ஒவ்வொன்றாக திரைக்கு வருகின்றன. செப்டம்பரில், 'புக்சட்டே லைப்' திரைக்கு வருகிறது. நாடகத்துறை பின்னணியிலிருந்து வந்த அரவிந்த் குப்ளிகர் இயக்கும் முதல் படம் இது. இதில் சஞ்சாரி விஜய், பூட்டு, சாவி பழுது பார்ப்பவராக நடித்துள்ளார். ஒரு நடுத்தர வர்க்க நபர், பணத்தின் பின்னால் ஓடினால், என்னென்ன நடக்கும் என்பதை, இப்படத்தில் காண்பித்துள்ளனர். சஞ்சாரி விஜய் இதுவரை நடித்த ஒவ்வொரு படத்திலும், வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

புதுப்பாடல் பழைய நடிகை வெளியீடு

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், நாகாபரணா இயக்கத்தில் திரைக்கு வந்த, 'நீலா' திரைப்படத்தை, ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. இத்திரைப்படத்தில் காயத்ரி ஜெயராம் அறிமுகமானார். இதையடுத்து 'ஸ்வாமி' என்ற படத்தில், அவர் நடித்திருந்தார். அதன்பின் அவர் கன்னடத்தில் நடிக்கவே இல்லை. பல ஆண்டுகள் நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த அவர், சின்னத்திரை தொடரில் நடித்திருந்தார். தற்போது 'லங்கே' என்ற படத்தில், அவர் முக்கியகதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நடந்த பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

படம் பெரிய தொகைக்கு விற்பனை

'கே.ஜி.எப்., - 2' திரைப்படம், நடப்பாண்டு ஜூலை 16ல் திரைக்கு வரும் என கூறப்பட்டது. ஆனால் ஊரடங்கால் தாமதமானது. இப்படம் எப்போது திரைக்கு வரும் என, ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 2022 ஏப்ரல் 14ல், இப்படத்தை திரையிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது கன்னடம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் திரைக்கு வருகிறது. இதற்கிடையில் இத்திரைப்படத்தின், சாட்டிலைட் உரிமைகள், 'ஜி டிவி'க்கு பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளதாம்.

கன்னடத்தில் மீண்டும் மலையாளம்

மலையாள நடிகைகள் பலர், சாண்டல்வுட்டுக்கு வந்து, 'சூப்பர் ஹிட்' படங்களில் நடித்துள்ளனர். நவ்யா நாயர், பாவனா போன்ற நடிகைகளின் வரிசையில் சவும்யா மேனன் சேர்ந்துள்ளார். நிரஞ்சன் நாயகனாக நடிக்கும், 'ஹன்டர்' என்ற படத்தில் நாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு கன்னடம் முதல் படம். ஆனால் ஐந்தாறு மலையாள படங்களில் நடித்து, அனுபவம் பெற்றவர். இத்திரைப்படம் ஆக்ஷன், திரில்லர் கதையம்சம் கொண்டது. அழகும், நடிப்புத்திறன் கொண்ட சவும்யா, கன்னடத்தில் ஒரு ரவுண்ட் வருவார் என, சாண்டல்வுட் வட்டாரம் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் செல்ல திட்டம்

'பிராரம்பா' திரைப்படம் மூலம், கன்னட திரையுலகில் நுழைந்தவர் நடிகை கீர்த்தி கலகேரி, தெலுங்கு திரையுலகுக்கு சென்றுள்ளார். தன் திறமைக்கு கிடைத்த வாய்ப்பு என, அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கன்னடத்தில், 'ஓ மை லவ்' என்ற படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் மூத்த நடிகர் சசிகுமார் மகன் அக்ஷித் நாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே மூன்று கட்ட படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர், ஆகஸ்ட் 30ல் மங்களூரில் 4ம் கட்ட படிப்பை துவங்கவுள்ளனர். பாடல் காட்சியை படமாக்க, காஷ்மீருக்கு செல்ல படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

குறுகிய காலத்தில் முன்னேற்றம்

வச்சனா இயக்கத்தில், வசிஷ்டா சிம்ஹா நடிப்பில் தயாராகும், 'தந்தகதே' திரைப்படத்தில், நடிகை யஷா சிவகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு வழக்கு தொடர்பாக, இரண்டு போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தும் கதையாம். இளம் நடிகை யஷா, 'பதவி பூர்வா' முதல் கன்னட திரையுலகுக்கு வந்தவர். குறுகிய காலத்தில், மூன்று படங்களை கையில் வைத்துள்ளார். செப்டம்பருக்கு பின் படப்பிடிப்பு துவங்க வாய்ப்புள்ளது. இப்படத்தில் கிஷோர், ரவிசங்கர், சிக்கண்ணா உட்பட பலர் நடிக்கின்றனராம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X