மாதத்துக்கு 5 கிலோ அரிசி போதும்உணவு அமைச்சர் உமேஷ் கத்தி தகவல்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
சாம்ராஜ்நகர்:''ஒரு மனிதருக்கு மாதத்துக்கு, 5 கிலோ அரிசி போதுமானது. ஒரு நபருக்கு தேவையான அரிசி நாங்கள் வழங்குகிறோம்,'' என உணவு மற்றும் பொது வினியோக துறை அமைச்சர் உமேஷ் கத்தி, தெரிவித்தார்.சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட்டில் பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தின், நடுவில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கத்துக்கு, வனத்துறை

சாம்ராஜ்நகர்:''ஒரு மனிதருக்கு மாதத்துக்கு, 5 கிலோ அரிசி போதுமானது. ஒரு நபருக்கு தேவையான அரிசி நாங்கள் வழங்குகிறோம்,'' என உணவு மற்றும் பொது வினியோக துறை அமைச்சர் உமேஷ் கத்தி, தெரிவித்தார்.

சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட்டில் பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தின், நடுவில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கத்துக்கு, வனத்துறை அனுமதி கோரப்பட்டுள்ளது.மேலுகாமனஹள்ளியிலிருந்து, கெக்கனஹள்ளா வாகன சோதனைச்சாவடி வரை, உணவு மற்றும் பொது வினியோகம், வனத்துறை அமைச்சர் உமேஷ் கத்தி, நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

பின், அவர் கூறியதாவது:பண்டிப்பூர் புலிகள் காப்பத்தில் வன விலங்குகள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். எனவே எந்த காரணத்துக்கும், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு அனுமதிக்க மாட்டோம்.இது குறித்து மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் எழுதி மாநில அரசின் நிலைப்பாட்டை விளக்கியுள்ளோம்.தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரேஷன் கார்டுகள் ரத்து செய்யும் வகையில், டிஜிட்டல் முறையில் ஆவணங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.

இதன் மூலம் அதிக அளவில் அரசுக்கு உணவுப்பொருட்கள் மிச்சமாகும். நஷ்டம் தவிர்க்கப் படும். ஒரு மனிதருக்கு மாதத்துக்கு, 5 கிலோ அரிசி போதுமானது. ஒரு நபருக்கு தேவையான அரிசியை நாங்கள் வழங்குகிறோம்.எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, அரசியல் உள்நோக்கத்தோடு, ஆட்சிக்கு வந்தால், 10 கிலோ அரிசி தருவதாக கூறுகிறார்.

எனக்கு இப்போது தான் 60 வயதாகிறது. பா.ஜ.,வில், 75 வயது வரை பதவிகள் அனுபவிக்கலாம். நான் முதல்வர் எதிர்பார்ப்பாளன். இன்னும் 15 ஆண்டு உள்ளதால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X