சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3 காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் திடீரென வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த 3 காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்த காதல் ஜோடிகளின் பெற்றோர்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். பாதிக்கப்பட்ட பெற்றோர் தங்கள் குழந்தைகள் தன்னுடன் வந்து விடுங்கள் என்று அவர்களிடம் கெஞ்சி கதறி

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் திடீரென வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த 3 காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த காதல் ஜோடிகளின் பெற்றோர்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். பாதிக்கப்பட்ட பெற்றோர் தங்கள் குழந்தைகள் தன்னுடன் வந்து விடுங்கள் என்று அவர்களிடம் கெஞ்சி கதறி பேசினர். அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு ஜோடி திருவண்ணாமலையை சேர்ந்த விக்னேஷ் 23 வயது வாலிபரும், ஆற்காடு பகுதியை சேர்ந்த ஜெகதா 22 வயது இளம் பெண்ணும் ஆவர். மற்றொரு ஜோடி திருவண்ணாமலையை சேர்ந்த அரவிந்த் 26 வயது வாலிபரும், சந்தவாசலை சேர்ந்த கீர்த்தனா 21 .

மற்றொரு ஜோடி திருவண்ணாமலை அருகில் சேர்ப்பாபட்டு பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடகிரி 22. கீர்த்தனா 21 ஆகிய மூன்று காதல் ஜோடிகளை போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். மேலும் அவர்களின் பெற்றோரை அழைத்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் அவர்களுக்கு உடன்பாடு ஏற்படவில்லை. காதல் ஜோடிகள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று எழுதி கொடுத்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X