சில வரி செய்திகள்...: இந்தியா

Added : ஆக 26, 2021
Share
Advertisement
அமலாக்கத் துறைக்கு உத்தரவுபுதுடில்லி: டில்லியை சேர்ந்த பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா, இந்திய ராணுவம் குறித்த தகவல்களை சேகரித்து சீன உளவுத் துறை அதிகாரிகளிடம் பகிர்ந்த புகாரில், கடந்த ஆண்டு டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர், அதற்காக சீன அதிகாரிகளின் ஒரு போலி நிறுவனம் வாயிலாக பல கோடி ரூபாய் பணம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த வழக்கை அமலாக்கத் துறை
 சில வரி செய்திகள்...: இந்தியா

அமலாக்கத் துறைக்கு உத்தரவு

புதுடில்லி: டில்லியை சேர்ந்த பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா, இந்திய ராணுவம் குறித்த தகவல்களை சேகரித்து சீன உளவுத் துறை அதிகாரிகளிடம் பகிர்ந்த புகாரில், கடந்த ஆண்டு டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர், அதற்காக சீன அதிகாரிகளின் ஒரு போலி நிறுவனம் வாயிலாக பல கோடி ரூபாய் பணம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இதற்கிடையே தனக்கு ஜாமின் வழங்கக்கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் ராஜீவ் சர்மா மனு தாக்கல் செய்தார். இதை நேற்று விசாரித்த உயர் நீதிமன்றம், இதற்கு பதிலளித்து அறிக்கை சமர்ப்பிக்க, அமலாக்கத் துறையினருக்கு உத்தர விட்டது.

சி.பி.ஐ., வழக்குப்பதிவு

புதுடில்லி: மேற்கு வங்கத்தில் சில மாதங்களுக்கு முன் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறைகள் அரங்கேறின.பின், கோல்கட்டா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து இதை சி.பி.ஐ., விசாரிக்கத் துவங்கியது. இந்நிலையில் இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக ஒன்பது வழக்குகளை, சி.பி.ஐ., பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அபிஷேக்கிற்கு அறுவை சிகிச்சை

மும்பை: பிரபல பாலிவுட் நடிகரும், அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனுக்கு, 45, கடந்த வாரம் சென்னை படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் கையில் எலும்பு முறிந்தது. மும்பைக்கு திரும்பிய அவருக்கு ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து, 'டிஸ்சார்ஜ்' ஆன அபிஷேக் பச்சன் மீண்டும் படப்பிடிப்பை துவங்கி உள்ளார். இதை சமூக வலைதளத்தில் அவரே தெரிவித்துள்ளார்.

கடற்படையினர் போர் பயிற்சி

புதுடில்லி: தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் அருகே உள்ள குவாம் கடல் பகுதியில், 'குவாட்' அமைப்பில் அங்கம் வகிக்கும் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த கடற்படையினர் நான்கு நாள் கூட்டு பயிற்சியை நேற்று துவங்கினர்.சுதந்திரமான இந்தோ - பசிபிக் பிராந்தியத்தை உறுதிப்படுத்த முயற்சிகளை எடுத்து வரும் இந்த குவாட் நாடுகளின் கடற்படைகள், போர் பயிற்சிகளை துவங்கி உள்ளது, சீனாவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமித் ஷாவிடம் கோரிக்கை

பரேலி: தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து ஹிந்துக்கள், சீக்கியர்கள் என ஏராளமானோர் இந்தியாவுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.இந்நிலையில், இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தானில் இருந்து தஞ்சமடைய வரும் ஹிந்து மற்றும் சீக்கிய குடும்பங்களுக்கு உத்தர பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் தங்க அனுமதி வழங்கக்கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, உ.பி., மாநில அமைச்சர் பல்தேவ் சிங் ஆலாக் கடிதம் எழுதி உள்ளார்.

விவசாயிகள் மாநாடு துவக்கம்

புதுடில்லி: மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லைப் பகுதியில், பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஒன்பது மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதையொட்டி, விவசாயிகளின் தேசிய மாநாடு சிங்கூ எல்லைப் பகுதியில் நேற்று துவங்கியது. இந்த இரண்டு நாள் மாநாட்டில் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் என 1,500 பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

கரை திரும்பிய கப்பல்

போர்ட் பிளேர்: அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு சொந்தமான 'எம்.வி., சிந்து' என்ற பயணியர் கப்பல், 400 பேருடன் போர்ட் பிளேரின் ஹாடோ ஜெட்டி துறைமுகத்தில் இருந்து ஹட் பே பகுதிக்கு நேற்று காலை புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் அதில் சில தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. பின், உடனடியாக துறைமுகத்திற்கு மீண்டும் திரும்பியது. அதிலிருந்த பயணியர் 'எம்.வி., காலிகாட்' கப்பலுக்கு மாற்றப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X