ஆலோசகர்களை உடனே நீக்குங்கள் சித்துவுக்கு காங். தலைமை உத்தரவு

Added : ஆக 26, 2021
Share
Advertisement
புதுடில்லி:''பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் இருக்கும் இரண்டு ஆலோசகர்களை உடனடியாக அவர் பணி நீக்கம் செய்யாவிட்டால், அதை நான் செய்ய நேரிடும்,'' என, மூத்த காங். தலைவர் ஹரிஷ் ராவத் எச்சரித்துள்ளார்.பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங். ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கிறது.இந்நிலையில், முன்னாள்

புதுடில்லி:''பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் இருக்கும் இரண்டு ஆலோசகர்களை உடனடியாக அவர் பணி நீக்கம் செய்யாவிட்டால், அதை நான் செய்ய நேரிடும்,'' என, மூத்த காங். தலைவர் ஹரிஷ் ராவத் எச்சரித்துள்ளார்.

பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங். ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கிறது.இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரரு மான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், மாநில முதல்வருக்கும் இடையே மோதல் நிலவி வந்தது.சமரசம் செய்து வைத்த தலைமை, சித்துவை பஞ்சாப் காங். தலைவராக நியமித்தது. சச்சரவுகள் நீங்கி அமைதி நிலவி வந்த நிலையில், சித்து ஆதரவாளரான அமைச்சர் ராஜிந்தர் சிங் பாஜ்வா, முதல்வருக்கு எதிராக குரல் கொடுத்து உள்ளார்.

அவருக்கு ஆதரவாக நான்கு அமைச்சர்கள் உட்பட 23 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இது பஞ்சாப் காங்.கில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில், பியாரே லால் கர்க் மற்றும் மல்விந்தர் மாலி என்ற இருவர், நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஆலோசகர்களாக சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். 'இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே காஷ்மீரை சட்ட விரோத மாக ஆக்கிரமித்து உள்ளன' என, மல்விந்தர் மாலி சமீபத்தில் கருத்து தெரிவித்தார்.

இது, காங்கிரஸ் கட்சியின் தலைமையையே கொதிப்படைய செய்துள்ளது. இது குறித்து, பஞ்சாப் காங். பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் நேற்று கூறியதாவது:மல்விந்தர் மாலி கூறிய கருத்துக்கு ஒட்டுமொத்த கட்சியும், மாநிலமும் எதிராக உள்ளது. ஜம்மு - காஷ்மீர் நம் நாட்டின் ஒரு பகுதி என்பதில் காங். உறுதியாக உள்ளது.

சித்துவின் இரு ஆலோசகர்களையும் கட்சித் தலைமை நியமிக்கவில்லை. அவர்களை பணி நீக்கம் செய்யும்படி சித்துவிடம் கூறியுள்ளோம். அதை அவர் செய்ய வில்லை எனில், நான் செய்வேன். கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துபவர்கள் தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X