முடி ஏற்றுமதியில் மோசடி அமலாக்கத் துறை சோதனை

Added : ஆக 26, 2021
Share
Advertisement
ஐதராபாத்:ஆந்திராவில் இருந்து தலைமுடி ஏற்றுமதி செய்யும் வியாபாரிகள், 16 கோடி ரூபாய் ஹவாலா பரிவர்த்தனை செய்தது தொடர்பாக, அதிரடி சோதனை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், கணக்கில் வராத 2.90 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர்.ஆந்திராவின் சில பகுதிகளில் தலைமுடி ஏற்றுமதி செய்யும் வியாபாரம் நடக்கிறது.இங்குள்ள சில ஏற்றுமதியாளர்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் கிடைத்தது. எட்டு

ஐதராபாத்:ஆந்திராவில் இருந்து தலைமுடி ஏற்றுமதி செய்யும் வியாபாரிகள், 16 கோடி ரூபாய் ஹவாலா பரிவர்த்தனை செய்தது தொடர்பாக, அதிரடி சோதனை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், கணக்கில் வராத 2.90 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர்.

ஆந்திராவின் சில பகுதிகளில் தலைமுடி ஏற்றுமதி செய்யும் வியாபாரம் நடக்கிறது.இங்குள்ள சில ஏற்றுமதியாளர்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் கிடைத்தது. எட்டு இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது, கணக்கில் வராத 2.90 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும், 12 மொபைல் போன்கள், மூன்று லேப்டாப், ஒரு கம்ப்யூட்டர், டைரிகள், கணக்கு புத்தகங்கள், குறிப்புகள் எழுதி வைத்திருந்த பேப்பர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆந்திராவில் தலைமுடி சேகரிக்கும் வியாபாரிகள்,வட கிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மிசோரம் வழியாக சீனாவுக்கு அனுப்புகின்றனர். இவற்றுக்கு சீன மொபைல் செயலி வாயிலாக பரிவர்த்தனை செய்துள்ளனர். சீன வியாபாரிகளும் அவற்றை உள்நாட்டு முடி போலவே கணக்கில் காட்டி, 28 சதவீத இறக்குமதி வரியை செலுத்தாமல் தவிர்த்துள்ளனர்.

மேலும், பணத்தையும் ஹவாலா முறையில் பெற்றுள்ளனர்.ஆந்திராவை சேர்ந்த ஒரு வியாபாரி மட்டும் 16 கோடி ரூபாய், மேலும் சில வியாபாரிகள் 3.38 கோடி ரூபாய்க்கு ஹவாலா வாயிலாக வியாபாரம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X