மனைவியுடன் வலுக்கட்டாய உடலுறவு பலாத்காரமாகாது| Dinamalar

'மனைவியுடன் வலுக்கட்டாய உடலுறவு பலாத்காரமாகாது'

Added : ஆக 26, 2021
Share
ராய்பூர்:'சட்டப்படி திருமணம் செய்த மனைவியுடன், வலுக்கட்டாயமாக கணவன் உடலுறவு கொண்டால், அது பாலியல் பலாத்காரமாகாது' என, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.தன் விருப்பத்துக்கு எதிராக, கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொண்டதாக சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த பெண், தன் கணவருக்கு எதிராக புகார் அளித்திருந்தார்.இது தொடர்பான வழக்கை விசாரித்த

ராய்பூர்:'சட்டப்படி திருமணம் செய்த மனைவியுடன், வலுக்கட்டாயமாக கணவன் உடலுறவு கொண்டால், அது பாலியல் பலாத்காரமாகாது' என, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

தன் விருப்பத்துக்கு எதிராக, கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொண்டதாக சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த பெண், தன் கணவருக்கு எதிராக புகார் அளித்திருந்தார்.இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சட்டப்படி திருமணம்செய்த 18 வயதுக்கு மேற்பட்ட மனைவியை கட்டாயப்படுத்தி கணவர் உடலுறவு கொள்வது பாலியல் பலாத்காரமாகாது.அதே நேரத்தில் இந்த வழக்கில், திருமணமானது முதல் வரதட்சணை கேட்டு கணவர் வீட்டார் தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள பெண் கூறியுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக தன் விருப்பம் இல்லாமல் தன் உடலின் சில முக்கியமான பகுதிகளில் கை விரல்கள், வேறு சில பொருட்களை செலுத்தி கொடுமைப்படுத்தியதாக கணவர் மீது அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வது பலாத்காரமாகாது. அதே நேரத்தில் மனைவியின் உடலில் இயற்கைக்கு மாறாக வேறு பொருட்களை செலுத்தி கொடுமைப்படுத்துவது குற்றமே.

அதன்படி, அதற்குரிய சட்டப் பிரிவுகளில் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது செல்லுபடி யாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 32 நாடுகளில், 'சட்டப்படி திருமணம் செய்த மனைவியுடன், வலுக்கட்டாயமாக கணவன் உடலுறவு கொண்டால், அது குற்றமாகாது' என்ற சட்டம் உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X