பொது செய்தி

இந்தியா

கொரோனா தொற்று மீண்டும் உயர்கிறது: கேரளாவில் அதிக பாதிப்பு

Updated : ஆக 28, 2021 | Added : ஆக 26, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி :இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை திடீரென உயர்ந்து வருகிறது. பண்டிகை காலம் வருவதால் அடுத்த இரண்டு மாதங்கள் எச்சரிக்கையுடன் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாட்டிலேயே கேரளாவில் பாதிப்பு மிக அதிகமாக இருப்பதால், தமிழக எல்லையில் 'கிடுக்கிப்பிடி' சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை
கொரோனா தொற்று மீண்டும் உயர்கிறது!  கேரளா,அதிக பாதிப்பு

புதுடில்லி :இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை திடீரென உயர்ந்து வருகிறது. பண்டிகை காலம் வருவதால் அடுத்த இரண்டு மாதங்கள் எச்சரிக்கையுடன் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நாட்டிலேயே கேரளாவில் பாதிப்பு மிக அதிகமாக இருப்பதால், தமிழக எல்லையில் 'கிடுக்கிப்பிடி' சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட செய்தியின்படி முந்தைய 24 மணி நேரத்தில், நாடு முழுதும் புதிதாக 46 ஆயிரத்து 164 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.25 கோடியாக உயர்ந்து உள்ளது.மேலும், 607 பேர் உயிரிழக்க, பலியானோர் எண்ணிக்கை நான்கு லட்சத்து 36 ஆயிரத்து 365ஆக உயர்ந்துள்ளது.


பாதிக்கப்பட்டோரில் சிகிச்சை பெறுவோர் சதவீதம், 1.03ஆக உள்ளது. அதே நேரத்தில், 97.63 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பலராம் பார்கவா நேற்று கூறியுள்ளதாவது:நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை இன்னும் ஓயவில்லை; அதன் பாதிப்பு தொடர்கிறது.கடந்த ஒரு வாரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41 மாவட்டங்களில் 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் நாடு முழுதும் பதிவான பாதிப்புகளில் 58.4 சதவீதம், கேரளாவில் ஏற்பட்டுள்ளது.

நாட்டிலேயே கேரளாவில் மட்டும் தான் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர். நான்கு மாநிலங்களில் 10 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் பேர் வரை சிகிச்சையில் உள்ளனர். அதே நேரத்தில் 31 மாநிலங்களில் 10 ஆயிரத்துக்கும் குறைவானோர் சிகிச்சை பெற்று
வருகின்றனர்.நம் முந்தைய அனுபவங்களின்படி பண்டிகைகளுக்குப் பிறகே பாதிப்பு அதிகமாகிறது. வழக்கமாக செப்., மற்றும் அக்., மாதங்களில் அதிக பண்டிகைகள் வரும். அதனால் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

தடுப்பூசி, நோயின் பாதிப்பை மாற்றுமே தவிர, முழுமையாக தடுக்காது. அதனால் தடுப்பூசி போட்டாலும் முக கவசம் அணிவது போன்ற கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவர்களில் 200 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.நாட்டிலேயே கேரளாவில் தான் அதிக பாதிப்பு உள்ளது. இதையடுத்து மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா நேற்று கேரளாவுக்கு வந்து, சுகாதார அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.

கேரளாவில் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, தமிழக எல்லையில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எல்லையோர பகுதிகளில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் தடுப்பூசி வழங்குவதும் வேகப்படுத்தப்பட்டுள்ளது.கேரளாவில் இருந்து வருவோர் கண்காணிப்பில் வைக்கப்

படுகின்றனர்.


'வீட்டில் பரவுகிறது'கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் மட்டும் 31 ஆயிரத்து 445 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இது நாட்டில் பதிவான மொத்த பாதிப்பில், 68.11 சதவீதமாகும்.இது குறித்து கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளதாவது:சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய ஆய்வின்படி மாநிலத்தின் மொத்த பாதிப்பில் 35 சதவீதம் பேருக்கு வீட்டில் இருந்தே தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதனால் வீடுகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
வீட்டில் தனிமைபடுத்திக் கொள்வோர், கட்டுப்பாடுகளை மீறுவதே பாதிப்பு அதிகரிக்க காரணம். வீட்டில் தனிமைபடுத்த போதிய வசதி இல்லாதோர், அரசின் பராமரிப்பு மையங்களில் இருப்பதே அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு.இவ்வாறு அவர் கூறினார்.


கடும் விமர்சனம்'கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கேரள அரசு தவறிவிட்டது' என, பல கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், மருத்துவ நிபுணர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
''கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட் அரசின் அலட்சியமான செயல்பாடே பாதிப்பு அதிகரிக்க காரணமாகி விட்டடது. ''வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்துகின்றனர்,'' என, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளீதரன் கூறியுள்ளார்.காங்., மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா, பிரபல பொது சுகாதார நிபுணர் டாக்டர் எஸ்.எஸ். லால் உள்ளிட்ட பலரும் மாநில அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
v j antony - coimbatore,இந்தியா
27-ஆக-202120:07:23 IST Report Abuse
v j antony தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தபின் கேரளாவில் எல்லாம் தலைகீழ் ஆகிவிட்டது சுகாதார துறை மாற்றப்பட்டது அலட்சியம் கண்டிப்பு இல்லாமை இதற்க்கு பல மக்கள் பலியாகின்றனர் பொருளாதாரமும் நலிவடைந்து வருகிறது பிரதமர் இதில் தலையிடவேண்டும் சுகாதாரத்துறையை மத்திய அரசு ஏற்கவேண்டும் கேரளாவின் பாதிப்பு தமிழகத்தையும் பாதிக்கும் என்பதால் இதில் அலட்சியம் கூடாது
Rate this:
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
27-ஆக-202118:05:33 IST Report Abuse
mrsethuraman  ஒரு வருடத்திற்கு எந்த பண்டிகையும் கொண்டாடாவிட்டால் என்ன ? குடியா மூழ்கி விடும் ? தேச பக்தி இல்லாதவர்கள் செய்யும் தெய்வ பக்தியால் எந்த பயனும் இல்லை
Rate this:
Cancel
MANIAN K - Dubai ,இந்தியா
27-ஆக-202115:36:40 IST Report Abuse
MANIAN K கேரள மருத்துவ குப்பைகள் காசாசை பிடித்த சிலரால் உள்ளெ வருகிறது. ஒரு இன்ஜினியரிங் காலேஜ் நடத்தும் டிரஸ்ட் தங்கள் கேரளா ஹாஸ்பிடல் கழிவுகளை காலேஜ் வளாகத்தில் கொட்டியதாக செய்தி வந்தது நடவடிக்கை ஏதும் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X