ஆப்கன் நிலவரம் மோசம்: அனைத்து கட்சி கூட்டத்தில் அரசு தகவல்

Updated : ஆக 28, 2021 | Added : ஆக 26, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
'ஆப்கானிஸ்தானில் நிலைமை மிகவும் சிக்கலாக உள்ளது; மீட்பு பணிகள் சவாலாக உள்ளன. இருப்பினும், அங்கிருக்கும் இந்தியர்களை பாதுகாப்புடன் அழைத்து வர வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது' என, நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் தற்போது தலிபான் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அங்குள்ள
ஆப்கன் நிலவரம், அனைத்து கட்சி கூட்டம், அரசு தகவல்

'ஆப்கானிஸ்தானில் நிலைமை மிகவும் சிக்கலாக உள்ளது; மீட்பு பணிகள் சவாலாக உள்ளன. இருப்பினும், அங்கிருக்கும் இந்தியர்களை பாதுகாப்புடன் அழைத்து வர வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது' என, நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் தற்போது தலிபான் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அங்குள்ள இந்தியர்களை மீட்பது மற்றும் அங்கு நிலவும் சூழல் குறித்து விவாதிப்பதற்காக, டில்லியில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.


முக்கிய கடமைபார்லிமென்ட் வளாக உள்ளரங்கில் நடந்த இந்த கூட்டத்தில், 31 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மூத்த அமைச்சர்கள் பியுஷ் கோயல் மற்றும் பிரஹலாத் ஜோஷி ஆகியோரும் பங்கேற்றனர். கூட்டத்தில், அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் வெளியுறவு செயலர் ஹர்ஷ் சிங்களா ஆகியோர் பேசியதாவது: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின், அங்கு முற்றிலும் நிலைமை சீர்குலைந்துள்ளது; முக்கிய இடங்களில் சிக்கல் நிலவுகிறது. காபூல் விமான நிலையத்தில் உச்சக்கட்ட குழப்பம் மற்றும் பதற்றமான சூழ்நிலை இருந்து வருகிறது.அங்குள்ள இந்தியாவைச் சேர்ந்த அதிகாரிகளையும், நம் மக்களையும் பாதுகாப்பாக மீட்டு வருவது தான் அரசின் முக்கிய கடமையாக உள்ளது.


ஆறு சிறப்பு விமானம்இப்போதைய உடனடி தேவை அது மட்டுமே. இதுவரை நம் விமானங்கள் வாயிலாக 565 பேரை மீட்டு வந்துள்ளோம். இவர்களில் 175 பேர் இந்திய துாதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள். மீட்பு பணிகள் மிகப்பெரிய சவலாகவே உள்ளன. விமான நிலைய வளாகத்தை கையாள்வதில் மிகுந்த சிக்கல் நிலவுகிறது.இவ்வாறு அவர்கள் பேசினர்.

கூட்டம் முடிந்த பின், நிருபர்களிடம் அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:ஆப்பரேஷன் தேவி சக்தி என்ற நடவடிக்கையின் கீழ், இந்தியர்களை முழு பாதுகாப்புடன் அழைத்து வர ஏற்பாடுகள் நடக்கின்றன. இதற்காக ஆறு சிறப்பு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.நிச்சயம் இந்தியர்கள் ஒருவர்கூட மீதம் இல்லாமல் அனைவரையும் அழைத்து வருவோம். வரும் நாட்களில் மேலும் தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், மதச் சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த தேவகவுடா, காங்கிரசின் மல்லகார்ஜுன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர்.தமிழகத்திலிருந்து தி.மு.க., சார்பில் பாலு மற்றும் சிவா, அ.தி.மு.க., சார்பில் நவநீதகிருஷ்ணன் மற்றும் ரவீந்திரநாத், வி.சி.க., சார்பில் திருமா வளவன் ஆகியோரும் பங்கேற்றனர்.


தமிழக எம்.பி.,க்கள் வலியுறுத்தல்தி.மு.க., மூத்த எம்.பி., பாலு கூறுகையில், ''காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பே இல்லை என தெரிகிறது. பயங்கரவாதிகளின் கூடாரமாக ஆப்கானிஸ்தான் மாறிவிடக் கூடாது,'' என்றார்.
வி.சி.க., - எம்.பி., திருமாவளவன் கூறுகையில், ''விசா நடைமுறைகளில் தாமதம் கூடாது. இந்தியாவில் படிக்கும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மாணவர்களுக்கான விசாக்களை உடனடியாக வழங்க வேண்டும்,'' என்றார்.- நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kmathivanan - Trichy ,இந்தியா
27-ஆக-202114:31:21 IST Report Abuse
kmathivanan நல்ல வேலை தாலிபனுக்கு ஆயுதம் கொடுக்கணும்ன்னு இன்னும் சொல்லவில்லை , நல்ல புகழ் வாய்ந்த மக்கள்
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
27-ஆக-202106:24:54 IST Report Abuse
Kasimani Baskaran ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை மீட்கும் பொருட்டு பாகிஸ்தானை அடித்து நொறுக்க இது சரியான நேரம். ஆப்கானிஸ்தான் பிரச்சினையில் தலிபான்கள் பிசி. பாக்கிஸ்தானில் இனி அவர்களுக்கு அதிக வேலையில்லை. பல பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் வேறு அங்கு சென்றுவிட்டார்கள். ஆகவே இதைவிட சிறப்பான வாய்ப்பு அமையாது.
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
27-ஆக-202101:47:30 IST Report Abuse
அன்பு தலிபான்களின் முழு கட்டுப்பாட்டில் ஆப்கான் வந்துவிட்டது. இனியும் அவர்களை அங்கீகாரம் செய்வதில் தாமதிக்க வேண்டாம். அப்படி தாமதிப்பதால், பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கே வசமாக சூழ்நிலை மாறும். உலகம் தாலிபானை அங்கீகரிப்பதால், அது சவூதி போன்று மாறும். அதைவிட்டு பொருளாதார தடைவிதித்தால், அங்கு பயங்கரவாதம் பெருகும். போதை பொருள்கள் உற்பத்தி செய்யப்படும். இந்தியா, அமெரிக்கா மற்றும் பல நாடுகளுக்கு குடைச்சல் கொடுக்கும்விதமாக பயங்கரவாத நாடாக அது மாறும்.
Rate this:
27-ஆக-202115:07:44 IST Report Abuse
Vittal anand rao.சரிகான பதி வு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X