பொது செய்தி

இந்தியா

படைப்புகள் நீக்கம் ஏன்? டில்லி பல்கலை விளக்கம்!

Added : ஆக 26, 2021
Share
Advertisement
புதுடில்லி:டில்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து பட்டியலின பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.டில்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கில பாடத்திட்டத்திலிருந்து தமிழகத்தை சேர்ந்த பட்டியலின பெண் எழுத்தாளர்கள் பாமா, சுகிர்தராணி மற்றும் மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி

புதுடில்லி:டில்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து பட்டியலின பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.

டில்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கில பாடத்திட்டத்திலிருந்து தமிழகத்தை சேர்ந்த பட்டியலின பெண் எழுத்தாளர்கள் பாமா, சுகிர்தராணி மற்றும் மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி ஆகியோரது படைப்புகள் சமீபத்தில் நீக்கப்பட்டன. இதற்கு தமிழக முதல்வர் உட்பட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இது குறித்து டில்லி பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதன் விபரம்: படைப்பாளிகளின் ஜாதி, மதம் மொழி பின்புலத்தை வைத்து டில்லி பல்கலைக்கழகம் செயல்படுவதில்லை. ஒருதலைபட்சமாகவும் இருக்கக்கூடாது. பாடப் பிரிவுகளை நீக்கியதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. மொழிப்பாடத்தில் இருக்கக்கூடிய பாடத்திட்டம் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது. தனி மனிதர்கள் அல்லது குறிப்பிட்ட சமூக அமைப்பின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் பாடத்திட்டம் இருக்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X