அரசியல் செய்தி

தமிழ்நாடு

வீடுகளை தாக்கும் யானைகளை காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை

Added : ஆக 26, 2021
Share
Advertisement
கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:அ.தி.மு.க., - பொன் ஜெயசீலன்: கூடலுார் சட்டசபை தொகுதி, வனம் சார்ந்த பகுதி. இங்கு அடிக்கடி யானைகளால், மக்களின் உடைமைக்கும்,உயிருக்கும் சேதம் ஏற்படுகிறது. தேவாலா, நாடுகானி, பாலவயல், ஆமைகுளம், புளியம்பாறை பகுதிகளில், ஒரு தாய் யானை, குட்டியுடன் வலம் வருகிறது. வீடுகளை சேதப்படுத்துகிறது. கடந்த 17 முதல் நேற்று முன்தினம் வரை ௧௦ வீடுகளை

கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:

அ.தி.மு.க., - பொன் ஜெயசீலன்:

கூடலுார் சட்டசபை தொகுதி, வனம் சார்ந்த பகுதி. இங்கு அடிக்கடி யானைகளால், மக்களின் உடைமைக்கும்,உயிருக்கும் சேதம் ஏற்படுகிறது.

தேவாலா, நாடுகானி, பாலவயல், ஆமைகுளம், புளியம்பாறை பகுதிகளில், ஒரு தாய் யானை, குட்டியுடன் வலம் வருகிறது. வீடுகளை சேதப்படுத்துகிறது. கடந்த 17 முதல் நேற்று முன்தினம் வரை ௧௦ வீடுகளை சேதப்படுத்தி உள்ளது. விவசாயிகளின் பயிர்களுக்கும் சேதம் ஏற்படுகிறது.எனவே, இந்த யானைகளை பிடித்து, தொலைவான துாரத்திற்கு கொண்டு சென்று விட வேண்டும்.

யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு, இழப்பீடும் வழங்கப்படுவதில்லை. காரணம், அந்த ஏழை மக்கள் வீடுகளுக்கு பட்டா இல்லை. சேதப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு, உடனடி நிவாரணமாக 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். யானைகள் ஊருக்குள் வராமலிருக்க, அகழிகளை ஏற்படுத்த வேண்டும்.

அமைச்சர் ராமச்சந்திரன்:

இரண்டு யானைகள், கூடலுார் கோட்டம், பந்தலுார், தேவாலா பகுதிகளில், வீடுகள் மற்றும் கடைகளை, எப்போதாவது சேதப்படுத்துகின்றன. கூடலுார் வனப் பணியாளர்கள், யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். கடந்த 15 நாட்களில், வீடுகளை சேதப்படுத்தி உள்ளன. முதுமலை காப்பகத்தில் உள்ள பயிற்சி பெற்ற கும்கி யானைகள் மற்றும் 45 களப் பணியாளர்கள் உதவியுடன், அந்த யானைகளை, வனப் பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யானைகளை கண்காணிக்கும் பணியில், 'ட்ரோன்'கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வரும் வரை, அங்கு வேட்டை தடுப்பு குழுவினர் முகாமிட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X