அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அரசின் நல்ல பணிகளுக்கு அ.தி.மு.க., துணை நிற்கும்'

Added : ஆக 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அ.தி.மு.க., - செங்கோட்டையன்: கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் சேர, 7.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்க்கட்சித் தலைவர் பெற்று தந்தார். தற்போது, தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் 7.5 சதவீதம் படிக்க, சட்ட மசோதாவை முதல்வர் தாக்கல் செய்துள்ளார். இது, மாணவர்களுக்கு மிகவும் பயன் அளிக்கும். கடந்த 2012 - 2020 வரை, அரசு பள்ளி

அ.தி.மு.க., - செங்கோட்டையன்:

கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் சேர, 7.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்க்கட்சித் தலைவர் பெற்று தந்தார். தற்போது, தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் 7.5 சதவீதம் படிக்க, சட்ட மசோதாவை முதல்வர் தாக்கல் செய்துள்ளார். இது, மாணவர்களுக்கு மிகவும் பயன் அளிக்கும்.

கடந்த 2012 - 2020 வரை, அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஆங்கில கல்வி கற்க வேண்டும் என்பதற்காக, தனியார் பள்ளிகளுக்கு அனுப்பினர். இந்நிலையை மாற்ற, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை துவக்கினோம். இதனால் 42 ஆயிரத்து 691 குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். கடந்த ஆண்டு 1.20 லட்சம் பேருக்கு மேல் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு மூன்று லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளை நோக்கி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையை ஏற்படுத்தியவர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தான்.

மத்திய அரசு பாடத் திட்டத்தை உருவாக்கியவர்களே வியந்து போகும் வகையில், தமிழகத்தில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 0.75 சதவீதமாக உள்ளது. இதுவும் இருக்கக் கூடாது என்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டோம். கொரோனாவால் பள்ளிகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஜெயலலிதா முதல்வரான பின் 45.71 லட்சம் மாணவ - மாணவியருக்கு இலவச, 'லேப்டாப்'கள் வழங்கப்பட்டன. வேறு எந்த மாநிலத்திலும் இது இல்லை. சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் கல்வி தொலைக்காட்சி துவக்கப்பட்டது. மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து இப்பணிகளை செய்துள்ளோம்.

கிராமப்புற அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.ஈராசிரியர் பள்ளிகள் உள்ளன. ஒரு ஆசிரியை மகப்பேறு விடுப்பில் ஓராண்டு சென்றால், அங்கு வேறு ஆசிரியரை அயல் பணியாக நியமிப்போம். ஆனால், அவர் அங்கு செல்வதில்லை. இதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும்.தனியார் பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் உள்ளார். அரசு பள்ளிகளில் ஐந்து வகுப்புகளுக்கு இரண்டுஆசிரியர்கள் இருக்கும் நிலை உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளி உள்ளது. மாணவர்களின் போக்குவரத்துக்கு தேவையான நிதியை வழங்குகின்றனர். அங்கு ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் உள்ளார். அந்த நிலை, தமிழகத்தில் வர வேண்டும்.எங்களை பொறுத்தவரை, ஒரு அரசு என்ன பணிகளை செய்ய வேண்டுமோ, அதை சிறப்பாக செய்துள்ளோம்.

உங்கள் காலத்தில் எப்படி வடிவமைக்க வேண்டும் என, சிந்தித்து செயலாற்றுங்கள். அடித் தட்டு மாணவர்களின் எதிர்காலத்தை உணர்ந்து செயல்படுங்கள். இரு மொழிக் கொள்கை, 'நீட்' தேர்வு என, நீங்கள் நல்ல பணிகளை ஆற்றுகிறபோது, அ.தி.மு.க., உறுதுணையாக நிற்கும்.


'திராவிட இயக்கத்தை வீழ்த்த முடியாது!'

செங்கோட்டையன்: தமிழகத்தில் வியத்தகு மாற்றங்களை எம்.ஜி.ஆர்., ஏற்படுத்தினார். அவர் மறைவுக்கு பின் ஜெயலலிதா, பள்ளி கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தினார். அவரது காலம் தமிழகத்தில் பொற்காலமாக இருந்தது. அதேபோல், காமராஜர் அனைத்து கிராமங்களிலும் பள்ளிகளை துவக்கினார். எம்.ஜி.ஆர்., சத்துணவு தந்தார். பல்வேறு தலைவர்களுக்கும் இங்கு வரலாறு உள்ளது.

திராவிட மண் என்றாலே, 1967க்கு பின் திராவிட கட்சிகள் தான் தமிழகத்தை ஆள முடியும் என்ற நிலை ஏற்பட்டது.திராவிட இயக்கங்களை சேர்ந்த நாம், மாறி மாறி வருவோமே தவிர, எவராலும் தமிழ் மண்ணில் திராவிட இயக்கத்தை வீழ்த்த முடியாது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
27-ஆக-202111:53:55 IST Report Abuse
vpurushothaman செங்கோட்டையன் " ரெய்டுக்கு"ப் பயப்படறார் போலே. நீங்க நல்லாத்தான் செஞ்சீங்க. தோற்கடிச்சுட்டாங்களே சார். துணை நில்லுங்க. கட்சியையும் பார்த்துக்குங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X