அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாவட்டந்தோறும் உண்டு உறைவிட மாதிரி பள்ளி அமைக்க வலியுறுத்தல்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
சட்டசபையில், தி.மு.க., - எம்.எல்.ஏ., வெற்றிஅழகன் பேசியதாவது: ஆசியாவில் மிகவும் பழமையான பச்சையப்பன் அறக்கட்டளை, 1846ல் துவக்கப்பட்டது. இதில், பணியாற்ற வாய்ப்பளித்த முதல்வருக்கு நன்றி. பச்சையப்பன் கல்லுாரிகளை உள்ளடக்கிய பல்கலை ஏற்படுத்த வேண்டும்.தி.மு.க., அரசு அமைந்ததில் இருந்து, அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது; 100 சதவீத மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய

சட்டசபையில், தி.மு.க., - எம்.எல்.ஏ., வெற்றிஅழகன் பேசியதாவது:

ஆசியாவில் மிகவும் பழமையான பச்சையப்பன் அறக்கட்டளை, 1846ல் துவக்கப்பட்டது. இதில், பணியாற்ற வாய்ப்பளித்த முதல்வருக்கு நன்றி. பச்சையப்பன் கல்லுாரிகளை உள்ளடக்கிய பல்கலை ஏற்படுத்த வேண்டும்.தி.மு.க., அரசு அமைந்ததில் இருந்து, அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது; 100 சதவீத மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்திற்கென தனி பாடத்திட்டம் அமைக்க, குழு அமைக்கப்படுவதை வரவேற்கிறேன்.கொரோனாவால் கடந்த ஓராண்டாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மொபைல் மற்றும் இணைய வசதி, கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு இல்லை. எனவே, அரசுஇலவசமாக மொபைல், 'பிராட்பேண்ட்' வசதி வழங்க வேண்டும்.

கல்வி, 'டிவி'யின் தரத்தை மேம்படுத்த வேண்டும்.அனைத்து பள்ளிகளிலும், நுாலகங்களிலும், டிஜிட்டல் நுாலகம் அமைக்க வேண்டும். சுற்றுச்சூழல், காலநிலை மாறுபாடு குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்களுக்குமனநல ஆலோசனை வழங்க வேண்டும்.சாரண - சாரணியர் இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும். அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 120 கல்வி மாவட்டங்களில், தலா ஒரு பள்ளியை, உண்டு உறைவிட மாதிரி பள்ளியாக மாற்ற வேண்டும்.வில்லிவாக்கம் தொகுதியில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைத்து தர வேண்டும். கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். தமிழ் என்பதை, ஆங்கிலத்தில் பேசும்போது, 'டமில்' என்கின்றனர். எனவே, தமிழை ஆங்கிலத்தில், 'Tamil' என்றில்லாமல், 'ThamiZh' என்று அழைத்திட, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X