அரசியல் செய்தி

தமிழ்நாடு

'எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது' : முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Updated : ஆக 28, 2021 | Added : ஆக 26, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
''காழ்ப்புணர்ச்சியுடன் நாங்கள் நடக்க துவங்கியிருந்தால், 'அம்மா' உணவகம் இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்தி இருப்போம். இந்த அரசை பொறுத்தவரை, எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.சட்டசபையில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., - அன்பழகன்: அ.தி.மு.க., ஆட்சியில் விழுப்புரத்தில், ஜெயலலிதா பல்கலை ஏற்படுத்தப்பட்டது. இது, அண்ணா மலை பல்கலையுடன்
எந்த காழ்ப்புணர்ச்சி, கிடையாது: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

''காழ்ப்புணர்ச்சியுடன் நாங்கள் நடக்க துவங்கியிருந்தால், 'அம்மா' உணவகம் இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்தி இருப்போம். இந்த அரசை பொறுத்தவரை, எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.


சட்டசபையில் நடந்த விவாதம்:



அ.தி.மு.க., - அன்பழகன்
: அ.தி.மு.க., ஆட்சியில் விழுப்புரத்தில், ஜெயலலிதா பல்கலை ஏற்படுத்தப்பட்டது. இது, அண்ணா மலை பல்கலையுடன் இணைக்கப்பட்டு உள்ளது. அதிகளவில் பல்கலைகள் இருந்தால் மட்டுமே, மாணவர்களின் கல்வித் தரம் உயரும்.

உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி:
நான்கு மாவட்டங்களை ஒருங்கிணைத்து, அண்ணாமலை பல்கலையுடன் இணைப்பது தான், மாவட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், மக்களுக்கு பயன் அளிக்கும். நுாற்றாண்டு கால பல்கலையில் படிப்பது தான் ஒவ்வொருவருக்கும் பெருமை. புதிய பல்கலைகளை உருவாக்கக் கூடாது என, நான் சொல்லவில்லை. அதிக எண்ணிக்கையில் பல்கலை துவங்கினால் மட்டும் கல்வி தரத்தில் எந்த உயர்வும் ஏற்படாது.

அன்பழகன்:
ஒவ்வொரு பல்கலையிலும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே, புதிய பல்கலைகள் துவங்க வேண்டும்.

பொன்முடி:
ஜெயலலிதா பல்கலைக்கு ஏதாவது நிதி ஒதுக்கினரா; இடம் பார்த்தனரா; 70 ஏக்கர் என வழக்கு போட்டனர். அங்கு, 7 ஏக்கர் கூட கிடையாது. அதை நிரூபிக்க தயாராக இருக்கிறேன். பெயர் வைக்க வேண்டும் என்பதற்காகவே, பல்கலை ஆரம்பித்தனர். ஆராய்ச்சி நடத்த வேண்டும் என்பதற்காக அல்ல. அண்ணாமலை பல்கலை 2,000 ஏக்கர் பரப்பளவு உடையது. பல்வேறு துறைகளை கொண்டது என்பதால், இங்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வாய்ப்பாக இருக்கும். அதனால் தான் நான்கு மாவட்டங்களை அதனுடன் இணைத்து இருக்கிறோம்.

அன்பழகன்: தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதால், மற்ற பணிகளை செய்ய முடியவில்லை. ஜெயலலிதா பெயரை வைத்ததால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறுத்தி விட்டனர்.

பொன்முடி:
காழ்ப்புணர்ச்சியுடன் நாங்கள் நிறுத்தவில்லை. மீன்வள பல்கலை, இசை பல்கலை, அந்த பெயரில் தான் உள்ளன.

முதல்வர் ஸ்டாலின்
: காழ்ப்புணர்ச்சியுடன் அந்த பெயரை திட்டமிட்டு நீக்கியுள்ளோம் என்ற பொருள்பட, முன்னாள் அமைச்சர் பேசினார். அப்படி காழ்ப்புணர்ச்சியுடன் நாங்கள் நடக்க துவங்கியிருந்தால், 'அம்மா' உணவகம் இல்லாத சூழ்நிலையை உருவாக்கி இருப்போம். இந்த அரசை பொறுத்தவரை, எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
E. RAJAVELU - Chennai,இந்தியா
27-ஆக-202113:55:45 IST Report Abuse
E. RAJAVELU குற்றவாளிக்கு மெரினாவில் எதற்கு சமாதி.
Rate this:
Cancel
E. RAJAVELU - Chennai,இந்தியா
27-ஆக-202113:55:24 IST Report Abuse
E. RAJAVELU அம்மா உணவகம் பெயரை அரசு உணவகம்ன்னு மாத்தணும்.
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
27-ஆக-202112:42:56 IST Report Abuse
sankar ஏதாவது விவஸ்தை இருக்கிறதா? கிரிமினல் குற்றம் செய்து ஜெயிலுக்கு போனவரின் பெயரில் பல்கலைகழகம். அவசர அவசரமாக அறிவிப்பு. அதுவும் தேர்தல் அறிவிப்புக்கு சற்று முன்னர். அதற்கு பதிலாக புகழ்பெற்ற விஞ்ஞானிகள், கல்விப்பெருமக்கள்,,மேதைகள் பெயரில் பல்கலைகழ்கங்களை நிறுவுங்களய்யா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X